குட் பேட் அக்லி பட ஹிட்டுக்கு காரணம் இளையராஜா? நடிகர் பிரேம்ஜி கொடுத்த பதிலடி - என்ன தெரியுமா?
குட் பேட் அக்லி படத்தின் ஹிட் குறித்து நடிகர் பிரேம்ஜி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை கடின உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தற்போது சோசியல் மீடியா முழுவதும் குட் பேட் அக்லி படத்தின் செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. அஜித்தின் பேன் பாயாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.
குட் பேட் அக்லி படம்:
அந்த அளவிற்கு படம் தாறுமாறாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் 250 கோடி வசூலை ஈட்டி வருகிறது. இந்த படம் இனியும் அதிக வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே குட் பேட் அக்லி - இளையராஜா சர்ச்சை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த படத்தில் தன் பாடலை பயன்படுத்தியதற்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இளையராஜா சர்ச்சை:
அதில் அவர், தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் படத்தில் பயன்படுத்தியதற்காக ஐந்து கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அந்த பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு இது தொடர்பாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர், படத்தில் இளையராஜா பாடல்களை விதிகளின்படி அனுமதி தான் வாங்கி இருக்கிறோம். இசையில் லேபில்களிடமிருந்து வாங்கி இருக்கிறோம். அந்த உரிமைகள் அனைத்துமே லேபில்களுக்கே சொந்தமானது என்று கூறியிருந்தார். பின் இது தொடர்பாக கங்கை அமரன், காப்பி உரிமை விவகாரத்தில் நாங்கள் சர்வதேச விதிகளை தான் பின்பற்றி இருக்கிறோம்.
https://www.youtube.com/watch?v=5KsJHdtdYrw
கங்கை அமரன் பேட்டி:
மைக்கேல் ஜாக்சன், தானே எழுதி நடனமாடி நடித்தவர் நடித்தார். இது அவர் கொண்டு வந்த திட்டம் தான். அனைத்து பாடல்களின் இசை உரிமையையும் இளையராஜாவே வாங்கி வைத்துக்கொண்டார். அவை அனைத்துமே அண்ணனின் லைப்ரரியில் சேர்ந்துவிடும். 7 கோடி ரூபாய் செலவழித்து ஒரு படத்திற்கு இசையமைப்பாளரை நியமிக்கிறார்கள். அவர்கள் இசைக்கும் பாடல்களுக்கு கைதட்டல் கிடைக்காமல் எங்கள் பாடல்களுக்கு கைத்தட்டல் கிடைக்கிறது. அப்படி என்றால் எங்கள் பங்கு கிடைக்க வேண்டாமா? பாடலை பயன்படுத்த அண்ணனிடம் அனுமதி கேட்டால் அவர் உடனே கொடுத்து விடுவார். ஆனால், அவரிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்துவதால் தான் அண்ணன் கோபப்படுகிறார். எங்களுக்கு பணத்தாசை எல்லாம் இல்லை. எங்களிடம் பணம் கொட்டி கிடைக்கிறது என்று கூறியிருந்தார்.
https://www.youtube.com/shorts/LEFXraDbYwA
பிரேம்ஜி பேட்டி:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரேம்ஜி அளித்த பேட்டியில், என் அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் தான் சப்போர்ட் செய்து பேசுவேன். அதேபோல் கங்கை அமரன் அவருடைய அண்ணனுக்கு சப்போர்ட் செய்து பேசி இருக்கிறார். அதேபோல் இளையராஜா பாடல்களால் தான் குட் பேட் அக்லி படம் பெரிய ஹிட் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. அந்த படம் ஹிட்டானதற்கு முழுக்க முழுக்க தல அஜித் மட்டும் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை
அஜித் ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.