"பிரேம்ஜி : நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம், வெங்கட் பிரபு : விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி" - பிரேம்ஜி திருமணத்தில் நடந்த கலாட்டா

By Rajkumar · 9/6/2024

கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் பிரேம்ஜியின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இப்போது இணையத்தில் டிரண்டாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார். மேலும், எல்லோரும் பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது? ஏன் நடக்கவில்லை? என்று பல கேள்விகள் கேட்டு இருந்தார்கள்.

தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்போது பிரேம்ஜிக்கு திருமணமாகி உள்ளது. இவர் இந்து என்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். இவர் சேலத்தைச் சேர்ந்தவர். இவர்களுடைய திருமணம் இன்று திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் நடந்த நிலையில், இதில் முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

வெங்கட் பிரபு அறிக்கை :

திருமணத்திற்கு முன் வெங்கட் பிரபு, எங்கள் குடும்பத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?"என்ற உங்கள் கேள்விக்கு கல்யாணம் வரும் ஒன்பதாம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிகையை பொதுவெளியில் பகிர்ந்து விட்டார்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

வைரல் ஆக்குங்க

எப்படி கல்யாணம் பத்திரிகை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்று புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. எங்களுடைய பிரவேசியை மதித்து,இருந்த இடத்திலிருந்து மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

மணப்பெண் குறித்த தகவல்:

அதனைத் தொடர்ந்து, பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளும் இந்து, சேலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இது காதல் கல்யாணம் என்றும் தகவல்கள் வெளிவந்தன. இந்து தான் முதலில் பிரேம்ஜி இடம் காதலை சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகுதான் இருவருமே வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

பிரேம்ஜி இந்துவை கரம் பிடித்தார்:

இந்நிலையில்தான் இன்று திருத்தணி முருகன் கோவிலில், பிரேம்ஜி- இந்து திருமணம் மிக நெருங்கிய உறவினர்கள் முன் நடந்து முடிந்தது. அண்ணன் வெங்கட் பிரபு தாலி எடுத்துக் கொடுக்க பிரேம்ஜி, இந்து கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போது திருமணத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் வீடியோகள் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில், புதுமணத் தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full