மலையாள சினிமாவில் தான் நல்ல படங்கள் வருகிறது? எம்புரான் பட விழாவில் பிரித்திவிராஜ் சொன்ன விஷயம்

By subhashini · 22/3/2025

மலையாள சினிமா பற்றி பிரித்திவிராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவருடைய தந்தை சுகுமாரன். இவரும் மலையாளத்தில் பிரபலமான நடிகர் ஆவார். அதேபோல் தாயார் மல்லிகா சுகுமாரனும் பிரபலமான நடிகை. இவருக்கு இந்திரஜித் சுகுமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவரும் மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர்களுடைய இரண்டாவது மகன் தான் பிரித்விராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் மொழியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிரித்திவிராஜ் திரைப்பயணம்:

பின் இவர் மலையாள மொழியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் ஆடு ஜீவிதம். இயக்குனர் பிளஸ்ஸி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அமலா பால், கோகுல், Jimmy Jean-Louis உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது.

எம்புரான் படம்:

இதை அடுத்தும் இவர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்2; எம்புரான். இந்த படத்தினுடைய முதல் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ், சானியா ஐயப்பன், கிஷோர், சாய்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரித்விராஜ் பேட்டி:

இந்த படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதோடு இந்த படம் ஐமேக்ஸ் திரையரங்களில் வெளியாகும் முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்று இருந்தது. அப்போது விழாவில் பேசிய பிரித்திவிராஜ், மோகன்லால்- மம்முட்டியும் தான் மலையாள சினிமாவில் முன்மாதிரியாக இருந்து வருகிறார்கள். மஞ்சு வாரியர் ஒரு லெஜன்ட். எம்புரான் ஒரு திரைப்படம் மட்டும் இல்லை.

https://www.youtube.com/watch?v=QwYP6x32TwI

மலையாள சினிமா பற்றி சொன்னது:

எங்களின் ரத்தத்தையும், வியர்வையும் இந்த படத்தில் கொடுத்திருக்கிறோம். இது ஒரு மேஜிக்காக இருக்கிறது. மலையாள சினிமா நல்ல பாதையில் சென்று கொண்டிருப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நாங்கள் சிறந்த படங்களையும், நல்ல கண்டன்களையும் தொடர்ந்து பல வருடங்களாக கொடுத்து வருகிறோம். இந்த பயணம் என்றுமே முடியாது என்று நான் நினைக்கிறேன். ஆனால், மலையாள சினிமாத்துறை மட்டும் தான் சிறந்த சினிமாக்கள் எடுத்து வருவதாக சொல்லும் விஷயத்தை நான் மறுக்கிறேன். அனைத்து துறைகளிலுமே நல்ல சினிமாக்கள் கொண்டுதான் வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full