ஆகஸ்ட் 30 ஒரு சம்பவம் இருக்கு, ப்ரியா அட்லீயின் அதிரடி பதிவு- குழப்பத்தில் ரசிகர்கள்
ஒரு சம்பவம் இருக்கு என்று பிரியா அட்லீ போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
அட்லீ திரைப்பயணம்:
கடைசியாக இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இதை அடுத்து அட்லீ தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார்.
அட்லீ – ப்ரியா திருமணம்:
இதனிடையே அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ப்ரியா அவர்கள் விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருந்தார். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா, அட்லீயை திருமணம் செய்து கொண்டார்.
பிரியா- அட்லீ குறித்த தகவல்:
திருமணத்திற்கு பின் பிரியா நடிப்பதை நிறுத்தி விட்டார். மேலும், பிரியா அட்லி திருமணம் ஆகி 8 வருடங்கள் கழித்து கர்ப்பமாக இருந்தார். கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இவர்கள் தங்கள் மகனுக்கு மீர் என்று பெயர் வைத்து இருக்கின்றனர். அதோடு ப்ரியா அட்லீ எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
Big reveal on the way… can’t wait to show you what we’ve been working on! any guessesssss??
— Priya Mohan (@priyaatlee) August 26, 2024
Unveiling on Aug 30th ❤️#PriyaAtlee #BigRevealOnAug30 pic.twitter.com/3aI0V960R6
அட்லீ போஸ்ட்:
இவர் தன் அடிக்கடி எடுக்கும் போட்டோ, வீடியோ என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். தற்போது அட்லீயின் தயாரிப்பு நிறுவனத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இவர் பிரியா அட்லீ பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஒரு புதிய அறிவிப்பு வெளியிட இருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்று யூகங்கள் என ஒரு வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார். தற்போது இவரின் பதிவுதான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே, இரண்டாவது குழந்தையா? புதிய பிசினஸ்ஸா? என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.