டீவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியலில் பெயர் பெற்று தன் நடிப்பு திறமையால் தற்போது மேயாதமான் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறி இருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலமான ஒரு சீரியல் ஆகும். 

மேயாதமான் படத்திற்கு பின்னர், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார் ப்ரியா. சமீபத்தில் கார்த்திக் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம் ‘ படத்தில் நடித்திருந்தார். தற்போது எஸ் ஜே சூர்யாவுடன் ‘மான்ஸ்டர் ‘ படத்திலும் நடித்துள்ளார்.படங்களில் பிஸியாக இருந்து வரும் இவர் pubg விளையாட்டிற்கு படு ரசிகராக இருக்கிறார்.

Advertisement

Players Unknown Battle Ground என்றழைக்கபடும் இந்த விளையாட்டு தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் படு பேமஸ். சமீபத்தில் இந்த விளையாட்டை பற்றி பிரதமர் மோடி கூட பேசியிருந்தது சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவியது.

இந்நிலையில் நேற்று pubg விளையாட்டு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவரது pubg பார்ட்னர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement