பாரின் ட்ரிப், கையில் சாம்பைன் கிளாஸ் - பிரியா பவானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

By subhashini · 27/3/2024

கையில் சரக்கு பாட்டிலுடன் இருக்கும் பிரியா பவானி சங்கரின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் செய்தி அறியப்பட்டார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார்.

இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை, குருதி ஆட்டம், ருத்ரன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்தார்.

ப்ரியா பவானி சங்கர் திரைப்பயணம்:

தற்போது ப்ரியா பவானி சங்கர் அவர்கள் பல படங்களில் பிஸியாக நடித்து வந்து இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருந்த ருத்ரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை அடுத்து கடைசியாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் அகிலன்.

ப்ரியா நடிக்கும் படங்கள்:

ஜெயம் ரவியின் “பூலோகம்” படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் தான் படத்தை இயக்கி இருக்கிறார். இதில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், தருண் அரோரா, ஜிராக ஜானி போன்ற நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.
இதை அடுத்து தற்போது இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சரக்கு பாட்டிலுடன் ப்ரியா:

பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் மட்டுமில்லாமல் பிரியா பவானி சங்கர் அவர்கள் ரத்னம், டிஎம்டி காலனி போன்ற பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் ப்ரியா பவானி சங்கர் கையில் சரக்கு பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வைரலாகும் புகைப்படம்:

அதாவது, தற்போது பிரியா பவானி சங்கர் அவர்கள் ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு அவர் ஜாலியாக தன்னுடைய விடுமுறை நாட்களை செலவழித்து வருகிறார். அந்த வகையில் இவர் என்ஜாய் பண்ணி ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்களை தான் ப்ரியா இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, நீங்களுமா! ஏன் இப்படி மாறிவிட்டீர்கள்? என்று கமெண்ட்களை போட்டு புகைப்படத்திற்கு லைக்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full