பெரிய ஹீரோ படம் 55 நாள் ஷூட், ஆனா படம் பார்த்த ஷாக்- நடிகை பிரியா பவானி சங்கர் சொன்ன விஷயம்

By subhashini · 15/10/2024

பிரபல ஹீரோ படத்தினுடைய படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார்.

இந்த சீரியலின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதற்குப்பின் இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து இவர் மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, ருத்ரன், யானை, திருச்சிற்றம்பலம், ரத்தினம், இந்தியன் 2, ருத்ரன் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

பிரியா பவானி சங்கர் தகவல்:

இந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் ப்ரியாவுக்கு பெயரையும் வாங்கி தந்தது. அதன் பின் இவர் நடித்த டிமான்டி காலனி 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்தது. முதல் பாகத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பும் இரண்டாம் பாகத்திலும் இருப்பதால் மக்கள் இப்படத்தை கொண்டாடி இருந்தார்கள்.

பிரியா பவானி சங்கர் திரைப்பயணம்:

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், டெப்பி என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பிரபல நடிகர் ஜீவாவின் நடிப்பில் வெளியாகி இருந்த பிளாக் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் பிரசன்னா, யோகி, சாரா ஷியாம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கே ஜி பாலசுப்பிரமணி இயக்கி இருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் பேட்டி:

இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் போது அளித்த பேட்டியில் பிரியா பவானி சங்கர், ஒரு பெரிய ஹீரோ உடைய படம். அதில் நான் 55 நாட்களுக்கு சூட்டிங் போனேன். 55 நாட்கள் வெயிலிலும் மழையிலும் ஷூட்டிங் முடிச்சுட்டு டப்பிங் போனா, வெறும் அரை நாளுக்கு தான் டப்பிங் பேசுற மாதிரி இருந்தது. என்கிட்ட சொன்ன கதை என்ன, இங்க இருக்கிறது என்ன, என்னை வைத்து சூட் பண்ணதெல்லாம் எங்க என்று கேட்டேன்.

https://www.youtube.com/shorts/cCGUwof4BPI

படப்பிடிப்பில் நடந்தது:

அதற்கு அவர்கள் அதெல்லாம் மியூசிக்கில வரும் என்று சொன்னார்கள். எனக்கு அப்போ ஒரு மாதிரி இருந்தது. நம்ம சாய்ஸ் மேல நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கும், எப்பவும் நம்ம கேக்குற கதை தான் ஸ்கிரீனில வரும் என்று நம்ம எதிர்பார்க்க முடியாது. அதற்குப்பின் ஹீரோவுக்கு கால் செய்து இதைப் பற்றி பேசிய போது, அவர் நானே 135 நாள் சூட் போனேன். என் சீனே இல்லை என்று சொன்னதாக கூறியிருந்தார். ஆனால், அந்த படம் பற்றி எந்த ஒரு தகவலையும் ப்ரியா பவானி கூறவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full