அதேபோல் மீண்டும் வைரலானதை எதிர்பார்க்கல- 'குட் பேட் அக்லி' பட நடிகை ப்ரியா வாரியார் பகிர்ந்த தகவல்

By subhashini · 14/4/2025

குட் பேட் அக்லி படத்தினுடைய வெற்றி விழாவில் பிரியா வாரியர் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருப்பவர் ப்ரியா வாரியார். இவர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளா திருச்சூரில் பிறந்தவர். இவர் ஒரே ஒரு கண்ணசைவின் மூலம் ஒரே இரவில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர். 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் தான் ஒரு ஆதார் லவ். அந்த படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராயா பூவி என்ற பாடலில் வரும் காட்சியில் ஒரு வரிக்கு இவர் நாயகனைப் பார்த்து கண்ணடிப்பார்.

இவர் கண்ணடிக்கும் காட்சி இந்திய அளவில் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி இருந்தது. ஒரு ஒரே ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். அதோடு அப்போது இளைஞர்களின் லேட்டஸ்ட் நாயகியே இவர் தான் இருந்தார். அதற்குப்பின் இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்திருந்தார். பின் கன்னட மொழியில் கிரீக் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் லவ்வர்ஸ் டே என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படி பிரியா பிரகாஷ் வாரியர் பல மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

ப்ரியா வாரியார் குறித்த தகவல்:

அதற்கு பின் சமீபத்தில் தனுஷின் இயக்கத்தில் வெளிவந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் பிரியா நடித்து இருந்தார். இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன்,பிரியா வாரியார் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து தற்போது ப்ரியா வாரியார் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார்.

குட் பேட் அக்லி படம்:

அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Cineulagam (@cineulagamweb)

விழாவில் ப்ரியா வாரியார் சொன்னது:

இந்த பாடலின் மூலம் மீண்டும் பிரியா வாரியர் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். இப்படி இருக்கும் நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற குட் பேட் அக்லி படத்தினுடைய வெற்றி விழாவில் பேசிய பிரியா வாரியர், எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உண்மையிலேயே இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. 2018ல் அடார் லவ் படத்தில் வைரலானது போல மீண்டும் வைரலாகி விட்டாய் என்று எல்லோருமே என்னிடம் சொல்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பலருமே தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் இந்த படத்தில் அஜித் சாருடன் நடிக்கலாம், அவருடன் ஒரே ஃபேமிலி இருக்கலாம் என்பது மட்டும்தான் இருந்தது.

View this post on Instagram

A post shared by Cineulagam (@cineulagamweb)

அஜித் பற்றி சொன்னது:

ஒரு கிளாசிக் ரெட்ரோ பாடல். அதுவும் சிம்ரன் மேம் ஆடிய பாடலுக்கு நான் சரியாக ஆடுவேன் என்று என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஆதிக் தான் நன்றி. நான் அஜித் சாரினுடைய தீவிர ரசிகராக மாறிவிட்டேன். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த மேடையிலேயே தொட்டு தொட்டு பேசும் சுல்தான பாடலுக்கு கியூட்டாக ப்ரியா நடனம் ஆடி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full