நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து போஸ் கொடுத்த பிரியமானவள் சீரியல் நடிகை. யாருன்னு பாருங்க.

By subhashini · 30/4/2020

சன் டிவியில் ஒளிபரப்பான ப்ரியமானவள் என்ற தொடரின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரவீணா நாயர். இவர் கேரளாவில் உள்ள செங்கணசேரியில் பிறந்தார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டும் ஆவார். இவருடைய அப்பா ராம்சந்திரன் நாயர். இவர் ஒரு கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.பிரவீணா அவர்கள் தனது 18 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். இவர் இதுவரை 50க்கும் மேற்ப்பட்ட மலையாள படங்களில் நடித்து உள்ளார்.

மலையாளத்தில் இவர் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, 100 டேஸ் ஆப் லவ், அக்னி சாட்சி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ப்ரமோத் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ப்ரமோத் துபாயில் ஒரு வங்கியின் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கௌரி என்ற மகள் உள்ளார். பின் இவர் சன் டிவியில் பல காலம் ஒளிபரப்பான பிரியமானவளே சீரியலில் நடித்தன் மூலம் தமிழ் ரசுகர்களிடையே பிரபலம் அடைந்தார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரவீணா அவர்கள் நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து கொண்டு போஸ் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B_fEz1PBte1/

நடிகை பிரவீணா திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் தன் குடும்பத்து உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டு கோழிக்கூட்டில் திடீரென ஒரு நல்ல பாம்பு குட்டி புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரவீணா அவர்கள் அருகில் உள்ள பாம்பு பண்ணைக்குத் தகவல் தெரிவித்தார். பின் அங்குள்ள ஊழியர்கள் விரைந்து வந்து கோழி கூட்டிலும் அதன் சுற்றுப்புறங்களில் பாம்பைத் தேடினர். ஆனால், பாம்பு கிடைக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து கோழி கூட்டுக்குள் பிறந்து சில நாட்களான நல்லபாம்பு குட்டி ஒன்று இருந்ததை கண்டனர். இதைப் பாம்பு பண்ணை ஊழியர்கள் பிடித்தனர். குட்டியாக இருந்தாலும் அந்த நல்ல பாம்பு படமெடுத்து ஆடியபடி இருந்தது. இதை கண்டு அங்கு உள்ளவர்கள் அனைவரும் பயந்தனர். பின் ஊழியர்கள் குட்டி பாம்பை கண்டு அஞ்ச வேண்டாம் என்று நம்பிக்கைக் கொடுத்தனர். பின்னர் அந்த குட்டிப் பாம்பை ஊழியர்கள் நடிகை பிரவீணா கையில் கொடுத்தார்கள்.

https://www.instagram.com/p/B_ZtGKPA1G0/

அதை இரண்டு கைகளிலும் தைரியத்துடன் பிரவீணா பெற்றுக்கொண்டார். இருந்தாலும் உள்ளுக்குள் லேசாக ப்ரவீணாவுக்கு பயம் இருந்தது. மேலும், அந்த குட்டி பாம்பு கையில் இருந்தபடி படமெடுத்து ஆடியது. இந்த வீடியோவை பிரவீணா தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பிரவீணா கூறியது, பாம்பைக் கண்டால் கொல்ல வேண்டும் என்கிற அணுகுமுறை இனிமேல் மாற வேண்டும் என்றார். தற்போது சீரியல்களில் நடித்து வருவதுடன் தன் கணவருடம் மினரல் வாட்டர் பிசினஸ் செய்து வருகிறார் பிரவீணா.

behindtalkies AMP · Quick view
View full