மதங்களை கடந்த காதல் திருமணம், பல விமர்சனங்கள் - சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த நடிகை ப்ரியாமணி
தன்னுடைய திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு நடிகை ப்ரியாமணி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியாமணி. இவர் தெலுங்கு திரையுலகில் வெளி வந்த ‘எவரே அதகாடு ’ படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் மலையாள படத்தில் நடித்தார். அதன் பின் இவர் தமிழில் வெளி வந்த ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு இவர் அது ஒரு கனாக் காலம், பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார். இருந்தாலும், இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது . மேலும், பிரியாமணி அவர்கள் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
பிரியாமணி திரைப்பயணம்:
பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பிரியாமணி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்திருந்தார். சில காலம் திரையில் இவர் காணாமல் போனார். இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து ப்ரியாமணி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் ப்ரியாமணி நடித்தும் , நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றும் வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, பிரியாமணி மதங்களை கடந்து திருமணம் செய்ததற்கு பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
ப்ரியாமணி பேட்டி:
பின் இவர் தன் கணவரான முஸ்தபா ராஜ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் ப்ரியாமணியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரியா மணி, நாங்கள் எங்களுடைய பெற்றோர்களுடைய சம்பதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டோம். சோசியல் மீடியாவில் வரும் விமர்சனங்கள் குறித்து நான் பெரிதாக கண்டு கொள்வதில்லை. என்னுடைய திருமணத்திற்கு பிறகு நிறைய விமர்சனங்கள் வந்தது.
சர்ச்சைகளுக்கு கொடுத்த பதில்:
நீங்கள் ஏன் உங்கள் மதத்தை விட்டு வெளியேறினீர்கள்? நீங்கள் வேறு மத நபரை திருமணம் செய்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருந்தார்கள். இதெல்லாம் பார்த்து எனக்கு ரொம்பவே மனவேதனை கொடுத்தது. குறிப்பிட்ட இரண்டு மாதத்தில் கலப்பு திருமணம் செய்பவர்களை மட்டும் ஏன் இப்படி தாக்குதல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜாதி, மதம் கடந்து பல முன்னணி நடிகர்கள் திருமணம் செய்து இருக்கிறார்கள்.
திருமணம் குறித்து சொன்னது:
அதற்கு ஏன் இவ்வளவு வெறுப்பு காண்பிக்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை. சமீபத்தில் நான் ஈத் பண்டிகைக்கு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது ஒருவர், நீங்கள் இஸ்லாமுக்கு மாறி விட்டீர்களா? என்றெல்லாம் கூறியிருந்தார். நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நான் திருமணம் செய்வதற்கு முன்பே முஸ்தபாவிடம் நான் மதம் மாற மாட்டேன் என்று சொன்னேன். நான் இந்துவாகத்தான் பிறந்தேன். எப்போதும் என் நம்பிக்கையை பின்பற்றுவேன் என்று கூறினேன். அவரும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.