தன் காதலருடன் முகத்தை மூடி ரகசியமாக வந்த விஜய் பட நடிகை..! வைரலாகும் புகைப்படம்

By Ajju · 23/6/2018
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, உலக அழகியான இவர் இந்தியில் பல படங்களில் நடித்து விட்டார். அத்துடன் மேரி கோம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஒரு சிறந்த நடிகை. தற்போது இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார். சமீப காலமா ஹோலிவுட்டில் செட்டில் ஆகி வரும் இவர் தற்போது ;குவாண்டிகோ என்ற ஆங்கில தொடரிலும் நடித்து வருகிறார். சில காலமாக நடிகை பிரியங்கா தன்னை விட 10 வயது இளையவரான நிக் ஜோனாஸ் எனும் ஹாலிவுட் பாடகரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன. பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக கைகோர்த்தப்படி சென்று வருகின்றனர் என்றும் அமெரிக்கா ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்து வந்தன. இந்நிலையில் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், நிக் ஜோனாஸ் இந்தியா வந்துள்ளனர். [embed]https://www.instagram.com/p/Bj6mNT_lQVe/?utm_source=ig_embed[/embed] இவர்கள் இருவரும் விமான நிலையத்தில் இருந்து வந்தபோது இருவரும் தங்களது முகத்தை மூடிக்கொண்டு காரில் ஏறி சென்றுள்ளனர். அதை மீறியும் இவரகள் இருவரையும் சில மீடியாக்கள் புகைப்படம் எடுத்துள்ளது. தற்போது அந்த புகைப்படம் வெளியாக, இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதி தானோ என்று அனைவரும் நினைத்து வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full