இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 பிரபலங்கள். கோலியை மிஞ்சிய பிரியங்கா சோப்ரா. ஒரு பதிவுக்கு இத்தனை கோடியா.

By Rajkumar · 2/7/2021

உலக அழகி பிரியங்கா சோப்ராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை. மேலும்,அவர் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதோடு நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து ஆன்லைனில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதனாலேயே பிரியங்கா சோப்ரா பெரும்பாலும் அமெரிக்காவில் தான் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட எத்தனை கோடி வாங்குகிறார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை Hopper HQ இணையதளம் வருடா வருடம் வெளியிட்டு வருகிறது. இந்த வருட பட்டியலில் முதலிடத்தில் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ உள்ளார். இன்ஸ்டகிராமில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 100 பேரில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டே பேர், வீராத் கோலி மற்றும் ப்ரியங்கா சோப்ரா. இந்த வருடம் 27-வது இடத்தில் இருக்கும் ப்ரியங்கா சோப்ரா சென்ற வருடம் வீராத் கோலி இருக்கும் 19-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ப்ரியங்கா சோப்ராவை 6.4 கோடி பேர் ஃபாலோ செய்கிறார்கள். இவர் ஒரு போஸ்டுக்கு சுமார் 3 கோடிகள் வாங்குகிறார். 

அதுமட்டும் இல்லாமல் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் அமெரிக்காவில் 144 கோடி ரூபாய்க்கு ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார் எனத் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வந்துள்ளது. அனைவரும் 'அடேங்கப்பா' என்று வாயை பிளக்கும் அளவிற்கு வீட்டின் விலை உள்ளது.அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை பிரியங்கா சோப்ரா வாங்கி உள்ளார்.

மேலும்,இந்த வீடு 20,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது ஆகும். அதோடு இந்த வீட்டை 20 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 144 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார் பிரியங்கா சோப்ரா. மேலும்,இந்த ஆடம்பர வீட்டில் 7 படுக்கையறைகள், 11 குளியலறைகள், 18 கழிவறைகள் உள்ளன என்ற தகவல் வந்து உள்ளது.

behindtalkies AMP · Quick view
View full