விஜய்யுடன் நடிக்க வைக்க ஆரம்பத்தில் பயந்தேன், ஏன்னா - பிரியங்கா சோப்ராவின் அம்மா சொன்ன தகவல்

By subhashini · 12/3/2025

நடிகர் விஜய் குறித்து பிரியங்கா சோப்ராவின் தாயார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார் பிரியங்கா சோப்ரா.

அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

பிரியங்கா சோப்ரா திருமணம்:

இதனிடையே பிரியங்கா சோப்ரா அவர்கள் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ மற்றும் இந்து மத சடங்குகளின் படியும் திருமணம் செய்து கொண்டார்கள். பிரியங்கா சோப்ரா இந்துமதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதோடு பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர்.

ப்ரியங்கா சோப்ரா கேரியர்:

இதனால் இவர்களின் திருமணம் குறித்து பலரால் பலவிதமாக பேசப்பட்டு இருந்தது. ஆனால், அதை இருவருமே கண்டுக்கொள்ளவில்லை. பின் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தையை பெற்று இருக்கிறார்கள். இவர்கள் தன் மகளுக்கு மால்டி மேரி என பெயர் வைத்தார்கள். திருமணத்திற்கு பின் பிரியங்கா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ப்ரியங்கா சோப்ரா அம்மா பேட்டி:

தற்போது இவர் ராஜமவுலி- மகேஷ் பாபு படத்தின் மூலம் மீண்டும் இந்திய சினிமாவுக்கு நன்றி கொடுத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் விஜய் குறித்து கூறியது, முதலில் பிரியங்கா சோப்ரா விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்தார். அதற்கு பிறகு தான் பட குழுவினர் என்னுடைய கணவரை தொடர்பு கொண்டு பேசி இருந்தார்கள். பின் நாங்கள் பிரியங்காவை சமாதானப்படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்தது பெரிய சவாலாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=CCNKv7SJgKU

விஜய் பற்றி சொன்னது:

அவருடைய அப்பா சொன்னதால் தான் அவர் இந்த படத்தில் நடித்தார். பிரியங்கா, விஜயின் மேல் அதிகளவிலான மரியாதை வைத்திருக்கிறார். விஜய் ரொம்ப நல்ல மனிதர். நான் ஆரம்பத்தில் பெரிய நடிகரோடு எப்படி என் மகள் நடிப்பார் என்று கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவர் பிரியங்காவிடம் ரொம்ப அன்பாக நடந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் அவளுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். விஜய் அற்புதமாக நடனம் ஆடக்கூடியவர். ராஜசுந்தரம் மாஸ்டர் நடனம் அப்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. தயாரிப்பாளர்களும் பிரியங்காவை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full