என் கணவர் கிட்ட தீவு, 200 கோடி சொத்து, அரசியல் பின்புலம் இருக்கு? தொகுப்பாளினி ப்ரியங்கா ஓபன் டாக்
விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான்தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை பிரியங்கா வென்றார்.
ப்ரியங்கா திருமணம்:
இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டனர். பின் சில மாதங்களுக்கு முன் பிரியங்கா வெளிநாட்டில் வசி என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தில் பிரியங்காவின் குடும்பம், உறவினர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். வசி டிஜேவாக பணியாற்றி வருகிறார். இவர் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், பப்புகளில் டிஜேவாக பணியாற்றி இருக்கிறார்.
ப்ரியங்கா திருமணம் சர்ச்சை:
இது மட்டும் இல்லாமல் இவர் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இருவருமே காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்து கொண்டார்கள். வசி இலங்கை வாழ் தமிழர். திருமணத்துக்கு பிறகு பிரியங்கா அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட நிகழ்சியை தொகுத்து வழங்கி பிஸியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, பிரியங்கா திருமணத்தை குறித்து பல சலசலப்புகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருக்கிறது. இவர் பணத்திற்காக தான் தன்னைவிட அதிக வயது கொண்ட வசியை திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.
ப்ரியங்கா பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரியங்கா, என்னுடைய கணவருக்கு தீவு இருக்கிறது. 200 கோடி சொத்து இருக்கிறது. அரசியல் குடும்பம் என்றெல்லாம் நிறைய சொல்லியிருந்தார்கள். ஆனால், அது எதுவுமே உண்மை கிடையாது. என்னுடைய கணவர் வசி ஒரு இலங்கை தமிழர். அவர் குடும்பம் லண்டனில் இருக்கிறார்கள். என் கணவரும் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார், அவ்வளவுதான். பணத்துக்காக கல்யாணம் செய்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் இத்தனை வருஷமா உழைத்திருக்கிறேன். அந்த பணம் என்னிடம் இல்லையா? பணத்தை தாண்டி உண்மையான காதலால் தான் வசியை திருமணம் செய்ய காரணம் என்று கூறியிருக்கிறார்.