தன் கணவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு பிரியங்கா தேஷ்பாண்டே சொன்ன குட் நியூஸ்
பிக் பாஸ் பிரபலம் பிரியங்கா தேஷ்பாண்டே சொன்ன குட் நியூஸ் - குவியும் வாழ்த்து
விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை பிரியங்கா வென்றார்.
ப்ரியங்கா திருமணம்:
இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டனர். பின் கடந்த ஆண்டு பிரியங்கா அவர்கள் வசி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தில் பிரியங்காவின் குடும்பம், உறவினர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். வசி டிஜேவாக பணியாற்றி வருகிறார். இவர் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், பப்புகளில் டிஜேவாக பணியாற்றி இருக்கிறார்.
பிரியங்கா குறித்த தகவல்:
இது மட்டும் இல்லாமல் இவர் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். வசி இலங்கை வாழ் தமிழர். திருமணத்துக்கு பிறகு பிரியங்கா அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட நிகழ்சியை தொகுத்து வழங்கி பிஸியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பிரியங்கா சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்ப்பமாக இருக்கும் ப்ரியங்கா:
அதாவது, பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதை அவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடனமாடி அறிவித்திருக்கிறார். டிசம்பரில் குழந்தை பிறக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பிரியங்காவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்