நடிகருடன் பெட்ரூம், நெருக்கமான காட்சியில் பிரியங்கா மோகன் நடித்திருக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென் இந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கிரஸாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

பின் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டாக்டர் படத்தில் பிரியங்கா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தில் இவருடைய நடிப்பும், அழகும் இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டது. அதன் பின் இவர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

பிரியங்கா மோகன் திரைப்பயணம்:

இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டான் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

பிரியங்கா மோகன் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் தனுஷ் மற்ற படங்களை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ரசிகர்கள் இந்த படத்தின் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பிரியங்கா மோகன் அவர்கள் ஜெயம் ரவி படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை எம். ராஜேஷ் இயக்குகிறார். அதன் பின் தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகராக திகழும் பவன் கல்யாண் படத்தில் பிரியங்கா கமிட்டாகி இருக்கிறார்.

Advertisement

டிக் டாக் படம்:

இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இப்படி இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர், பிரதர் ஆகிய இரு படங்களுமே ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இது மட்டுமில்லாமல் இன்னொரு படத்திலும் பிரியங்கா நடித்திருக்கிறார். அந்த படத்தினுடைய பெயர் டிக் டாக். இந்த படம் பிரியங்கா மோகன் சினிமாவிற்கு வந்த புதிதில் நடித்தது.

Advertisement

ரசிகர்கள் வருத்தம்:

இந்த படத்தினுடைய ட்ரெய்லர் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். அந்த ட்ரைலரில் பிரியங்கா மோகன், நடிகர் ஒருவருடன் பெட்ரூம் சீன் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், இது நம்ப பிரியங்கா மோகனா! ஏன் இப்படி எல்லாம் நடித்திருக்கிறீர்கள்? மனசு வலிக்கிறது என்றெல்லாம் கமெண்ட்களை தெரிவிக்க விட்டு வருகிறார்கள்.

Advertisement