விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி - கணவருடன் சேர்ந்து புது தொழில் தொடங்கிய பிரியங்கா.

By subhashini · 19/5/2024

சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி தன் கணவருடன் புதிய தொழில் தொடங்கி இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போட்ட ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா. சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த சன் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த தொடர் கடந்த 2018 ஆம் இந்த ஆண்டு துவங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் நிறைவடைந்தது. மேலும், ரோஜா சீரியலில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா நல்காரி. இவர் முதலில் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழில் ரோஜா சீரியல் மூலம் மக்கள் தமிழில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

பிரியங்கா நடிக்கும் சீரியல்:

இதனை தொடர்ந்து பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்தார். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே நடிகை பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை காதலித்து வந்தார். பின் பிரியங்காவிற்கும் ராகுலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு நிச்சயதார்தம் முடிந்தது. ஆனால், சில காரணங்களால் இவர்கள் திருமணம் நின்று விட்டது.

பிரியங்கா-ராகுல் திருமணம்:

பின் கடந்த ஆண்டு தான் ப்ரியங்காவிற்கும் ராகுலுக்கும் விநாயகர் கோவிலில் படு சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். மேலும், திருமணத்திற்கு பின் பிரியங்கா சீரியலில் நடித்து தான் வந்தார். ஆனால், அவர் கணவருக்கு பிரியங்கா நடிப்பதில் விருப்பம் இல்லை என்று சொன்னதால் சீதாராமன் சீரியலில் இருந்து நாயகி பிரியங்கா வெளியேறி விட்டார்.

நளதமயந்தி சீரியல்:

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நள தமயமந்தி தொடரில் நடித்து வருகிறார்.
மேலும், இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டு சென்றிருக்கின்றது. சில மாதங்களுக்கு முன் இவர் சீரியலில் இருந்து மீண்டும் விலக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், பிரியங்கா இல்லை என்று பதிவு போட்டு இருந்தார். சமீபத்தில் பிரியங்கா நல்கரி தன்னுடைய கணவருடன் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் பதிவுகள் எல்லாம் வெளியாகின்றது.

ப்ரியங்கா தொடங்கிய புது தொழில்:

உண்மையில் இருவருமே பிரியவில்லை. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் புதிதாக தொழில் தொடங்கி இருக்கும் தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அதாவது, பிரியஙகா நல்காரி தன்னுடைய கணவருடன் சேர்ந்து மலேசியாவில் புதிய ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இன்று அந்த புதிய ஹோட்டல் உடைய பூஜை நடைபெற்று இருக்கிறது. கழுத்தில் மாலை உடன் பிரியங்கா நல்காரி தன்னுடைய கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full