சினிமா வாய்ப்பு, 30 வருட அனுபவம், 600 படங்கள் - மக்கள் தொடர்பில் நிகில் முருகன் எக்ஸ்குளூசிவ்

By subhashini · 23/2/2026

சினிமா என்ற பொழுதுபோக்கில் மக்கள் தொடர்பாளர் என்ற ஒரு முக்கியமான பணி உண்டு. சினிமாவில் போடும் பணம் சிந்தாமல் சிதறாமல் திரும்ப கிடைக்கவும், படம் மக்களிடம் கொண்டு சேரவும் இந்த வேலையை செய்பவர்கள் தான் சினிமா பிஆர்ஓக்கள்.படத்தினுடைய பூஜை தொடங்கி ரிலீசுக்கு பிறகு நடக்கும் சக்சஸ் மீட் வரை தீயாய் வேலை செய்யும் சினிமா பிஆர் பி ஆர் ஓக்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்களில் ரஜினி, கமல் தொடங்கி தற்போது அறிமுகம் புது நடிகர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த பி ஆர் நிகில் முருகன். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இவர் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடிக்கும் லீடர் படத்தில் தான் இவர் நடிக்கிறார். இது இவருடைய 600 ஆவது படம்.

நிகில் முருகன் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நிகில் முருகன், பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆரம்பகால ஆசை. தாத்தா டி எஸ் சொக்கலிங்கம் தினமணியின் முதல் ஆசிரியராக இருந்தார். அதனால் தான் இந்த ஆசையும் வந்தது. பிறகு மைசூர் பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசத்தில் டிப்ளமோ படித்தேன். பின் நான் தினமணி, வீரபத்திரன் மூலமாக பத்திரிகைகளில் சினிமா எழுதிக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு தான் பாக்கியராஜ் சார் பிஆர்ஓ மூலமாக சினிமா தொடர்பு கிடைத்தது. அவர் மூலமாக பாக்கியா பத்திரிகையில் வேலை செய்தேன்.

https://www.youtube.com/watch?v=oKW_YaVvOJk

சினிமா வாய்ப்பு:

பிஆர் செல்வம் வேலை பார்த்த படங்களில் அவருக்கு அசிஸ்டன்ட் ஆகவும் வேலை செய்தேன். காரணம் அப்பவே பிஆர்ஓ எனக்கு ரொம்ப பிடித்தது. அடிப்படையிலேயே எல்லோருடனும் ஈசியாக மிஞ்சலாகுவது என்னுடைய குணம். இந்த விஷயம் தான் எனக்கு மிகப்பெரிய பலமே. கொஞ்ச நாட்களில் எனக்கு தனியாக பட வாய்ப்புகள் வந்தது. அதற்குப் பிறகு ஜூவல்லர்ஸ் நகை கடையில் பிஆர் ஒர்க் கிடைக்க எனக்கு சிபாரிசு செய்தார் செல்வம். அங்க ஜோடி- ஜெர்ரி அறிமுகம் கிடைத்தது.

பிஆர் வாய்ப்பு:

அவங்க இயக்கத்தில் வந்த உல்லாசம் மூலம் தான் சினிமா மக்கள் தொடர்பாளரானேன். இது தான் முதல் படம். அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே நேருக்கு நேர், தேவதை, காதல் மன்னன் போன்ற பல படங்களில் கமிட்டாகி இருந்தேன். ஒரே சமயத்தில் மணிரத்தினம், நாசர்,சரண் சார், விஜய், அஜித், சூர்யா என பலருடைய படங்களில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தனித்து தெரிய வேண்டும் என்றால் தனியாக எதையாவது பண்ணினாலே போதும். டெக்னாலஜியை அப்டேட் செய்வதிலும் ரொம்ப உஷாராகவே இருந்தேன்.

https://www.youtube.com/shorts/E1MbSTExgg4

பிரபலங்களிடம் கற்றது:

கே.பாலசந்தர் ஆபிசில் எதுக்காகவும் யார்கிட்டயும் எக்ஸ்கியூஸ் கேட்பதை நான் விரும்புவதில்லை என்று சொல்லியிருந்தது. அவரிடம் இருந்து இந்த பழக்கத்தை எடுத்துக் கொண்டேன். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒரு இன்ச் அடுத்த அடிக்கான முயற்சியை செய்யணும் என்பதை சங்கர் சாரிடம் கற்றுக் கொண்டேன்.
ஒரு விஷயத்தை முடியாதுன்னு நினைக்காமல் கடைசி வரையும் ட்ரை பண்ணனும் கமல் சாரை பார்த்து தெரிந்து கொண்டேன். ரஜினி சாரிடமிருந்து அப்சர்வேஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக பல கோணங்களில் பார்ப்பார் என்று கூறுகிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full