சீரியல் நடிகையுடன் நிச்சயதார்த்தம் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் - இப்போ 6 மாதத்தில் அப்பாவாகியுள்ள ஆர் கே சுரேஷ்.

By Rajkumar · 23/4/2021

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேசுக்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அதேபோல ஒரு சில நடிகர்கள் தங்களது பலத்தை தாங்களே தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர் ஆனால் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.

https://twitter.com/studio9_suresh/status/1385544148724240384

தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா என்ற பாடலிலும் தோன்றியிருந்தால் ஆர்கே சுரேஷ். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரா தப்பட்டை' விஷால் நடிப்பில் வெளியான 'மருது' போன்ற படத்தில் வில்லனாக மிரட்டிய ஆர் கே சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான 'பில்லா பாண்டி' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் ஆர் கே சுரேஷுக்கு சீரியல் நடிகை திவ்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையும் பாருங்க : 15 ஆண்டுகளுக்கு முன்பே முதல் திருமணம் செய்துள்ள விஷ்ணு விஷாலின் இரண்டாம் மனைவி - இவர் தான் அவரின் முன்னாள் கணவர்.

ஆனால், திருமணம் நின்றுவிட்டதாக திவ்யா அறிவித்து இருந்தார்.இதுகுறித்து திவ்யா கூறிய போது, அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குல் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது. மேலும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்து பெரும் பிரச்சனை வர வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம்.இதனால் தான் திருமண நிச்சயம் ஆன பின்பும் திருமணம் வேண்டாம் என பிரிந்துவிட்டோம் என கூறி இருந்தார் திவ்யா.

https://twitter.com/cmpasenthil/status/1385551238729592841

இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும்  கடந்த ஆண்டு அக்டொபர் மாதம் ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. அந்த திருமண விழாவில் வெறும் 15 பேர் தான் கலந்து கொண்டார்களாம். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்த ஆர் கே சுரேஷ், 'என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றுள்ள சந்தோஷமான தருணத்தை உங்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பகிர்கிறேன் எனக்கு திருமணம் முடிந்துவிட்டது உங்களின் அன்பு ஆதரவு வாழ்த்துக்களுக்கு நன்றி என்னுடைய தனி உரிமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் 'என்று கூறி இருந்தார்.

ஆனால், இந்த பதிவை ஆர் கே சுரேஷ் நீக்கியுள்ளார். அதற்கு முக்கிய காரணமே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 6 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்று கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேலை திருணம் செய்துகொண்டு பல மாதங்கள் கழித்து தனது திருமண செய்தியை அறிவித்தாரா ஆர் கே சுரேஷ் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

behindtalkies AMP · Quick view
View full