பார்ட்டியில் பல மணி நேரம் வெளியே நிற்க வைத்த பிரபல இயக்குநர், வளர்ந்து வந்து பதிலடி கொடுத்த அஜித்- தயாரிப்பாளர் சொன்ன விஷயம்
பிரபல இயக்குனர் ஒருவர் அஜித்தை அவமானப்படுத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறது. இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறார். மேலும், இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருப்பது, இந்த சம்பவம் 1995ஆம் ஆண்டு நடந்தது. அந்த காலத்தில் ரொம்பவே பிரபலமான இயக்குனரின் பிறந்தநாள் விழா ஹோட்டலில் நடந்தது. அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க அஜித்மே பொக்கை வாங்கிக்கொண்டு வந்திருந்தார். அப்போது அந்த இயக்குனர் இருந்த சூட்ரூமில் பிரபலமாக இருந்த இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பார்களுடன் மட்டும் பார்ட்டி செய்து கொண்டிருந்தார்.
தயாரிப்பாளர் பேட்டி:
அங்கு சென்ற அஜித் அந்த இயக்குனரின் உதவியாளரை அழைத்து, நான் வந்திருப்பதாக இயக்குனர் இடம் சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தார். உடனே அந்த உதவி இயக்குனரும் அஜித்தை உட்கார வைத்துவிட்டு அந்த செய்தியை இயக்குனரிடம் சொல்வதற்காக ரூமுக்கு சென்றார். ஆனால், உள்ளே சென்ற உதவி இயக்குனர் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கு மேலாகியும் வெளியே வரவே இல்லை. ஒரு கட்டத்தில் அவர் வெளியே வந்தார்.
அஜித் குறித்து சொன்னது:
அப்போது அவரை அழைத்து அஜித், நான் வந்தேன் என்று சாரிடம் சொன்னீர்களா? அதற்கு அவர் என்ன சொன்னார்? என்று கேட்டார். அதற்கு உதவியாளர், நீங்கள் வந்திருப்பதை நான் இயக்குரிடம் சொல்லி விட்டேன். இருந்தாலும் இன்னொருமுறை அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்று மீண்டும் ரூமுக்குள் சென்றார். அதற்குப் பிறகு சீக்கிரமாகவே வெளியே வந்த அந்த உதவியாளர், அஜித் சாரிடம் இப்போது பிஸியாக இருக்கிறாராம்.
அஜித் சந்தித்த அவமானம்:
அதனால் இன்னொரு நாளில் உங்களை சந்திக்கிறேன் என்று சொன்னதாக கூறினார். இதை கேட்டு அஜித்திற்கு கோபம் வந்தது. உடனே சேரிலிருந்து வேகமாக எழுந்த அஜித் கோபத்தை வெளி காட்டாமல் தன்னிடம் இருந்த பொக்கையை அந்த உதவியாளரிடம் கொடுத்துவிட்டு ஒன் டே வில்கம் என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்து ஓட்டலை விட்டு வெளியே சென்றார். அதற்குப்பின் அஜித் மிகப் பெரிய ஸ்டார் ஆனார். அப்போது அந்த பிரபல இயக்குனர் அஜித்தை வைத்து படம் செய்ய எவ்வளவோ முயற்சிகளை செய்தார். ஆனால், கடைசிவரை அந்த இயக்குனரை அவர் பக்கத்தில் சேர்க்கவே இல்லை. அதுதான் அஜித்துடைய குணம் என்று கூறியிருக்கிறார்.
அஜித் திரைப்பயணம்:
கடைசியாக அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்தது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இந்த படத்தினுடைய சூட்டிங் தொடங்கி விட்டார்கள். இதை அடுத்தும் சில படங்களில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.