வைரமுத்து செய்த துரோகத்தால் அப்பா நொந்து போயிட்டாரு - தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஆதங்கம்

By Rajkumar · 13/7/2024

பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் மறைந்த இயக்குனர் எம்.பாஸ்கர் அவர்களுக்கிடையே இருந்த பிரச்சனை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. 'நிழல்கள்' என்னும் திரைப்படத்தில் 'பொன்மாலைப் பொழுது' என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமாக இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார். இதுவரை வைரமுத்து அவர்கள் 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருக்கும் வைரமுத்து குறித்து, தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

தனது அப்பா எம்.பாஸ்கர் அவர்களுக்கும், வைரமுத்து அவர்களுக்கும் இருந்த பிரச்சனை பற்றி கூறியிருக்கிறார். அதில், 'சூலம்' படத்திற்கு பின்னர் என்னுடைய அப்பா வைரமுத்துவை பாடல் எழுத அழைக்கவே இல்லை. அந்த நிலையில், ஒரு நாள் ஒரு படத்திற்கு பாடலை வைரமுத்துவை வைத்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று , இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கூறினார். அதற்கு என்னுடைய அப்பா, 'அவருக்கு நான் எழுத வாய்ப்பு கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு வேலை போய்விடும் பரவாயில்லையா' என்று கேட்டார். அந்த அளவிற்கு அவர், வைரமுத்துவின் மீது வெறுப்பில் இருந்தார்.

தயாரிப்பாளர் பாலாஜி பேட்டி:

எனக்கு சினிமாவில் அதிக விருப்பம் இருந்ததால் பாடல் உருவாக்கத்தின் போதெல்லாம் அங்கேயே உட்கார்ந்து இருப்பேன். அப்போது என் அப்பாவிடம் கண்ணதாசனுக்கு பிறகு கவிஞர் வைரமுத்து தான். அப்படிப்பட்ட ஒரு திறமைசாலியை நீங்கள் ஏன் பயன்படுத்த மறுக்கிறீர்கள். ஏற்கனவே நீங்கள் அவருடன் பணி செய்து இருக்கிறீர்களே என்று கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் அதை தட்டிக் கழித்து விட்டார். பிறகு எனக்கு ஒரு அளவுக்கு புரிதல் வந்தவுடன் நான் மீண்டும் அப்பாவிடம் கேட்டேன். அப்போதுதான் அவர் காரணத்தைச் சொன்னார்.

https://www.youtube.com/watch?v=x5veEdEKJ0k

வாய்ப்பளித்த எம்.பாஸ்கர்:

என்னவென்றால், 'சூலம் 'படத்திற்கு இளையராஜாவை இசையமைப்பாளராக அப்பா கமிட் செய்திருக்கிறார். அந்தப் படத்திற்கு முதல் இரண்டு பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத, அடுத்த இரண்டு பாடல்களை யாரை வைத்து எழுதலாம் என்று இளையராஜாவிடம் அப்பா கேட்டுள்ளார். அதற்கு அவர் வைரமுத்துவின் பெயரை பரிந்துரைக்க, அப்பாவும் ஒப்புக்கொண்டார். அதன்படி 'சூலம்' படத்தில், அவருக்கு ஜூலி என்ற பாடலும், சூலம் சூலம் என்ற பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

நிழல்கள் படம்:

அதே சமயத்தில் 'நிழல்கள்' படத்திற்கும் வைரமுத்து பாடல்களை எழுதினார். அந்தப் படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். அப்போது அவர் மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த நேரம், ஆகையால் அவர் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டானது. அதேபோல், 'நிழல்கள்' படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்தப் படம் ரிலீஸ் ஆன அடுத்த மாதமே 'சூலம்' படமும் ரிலீஸ் ஆனது.

வைரமுத்து செய்த செயல்:

இதற்கிடையே 'நிழல்கள்' திரைப்படம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது. அதனால் வைரமுத்து, 'சூலம்' திரைப்படத்தில் முதலில் பாடல்களை எழுதியதை மறைத்து, தான் பாடல்கள் எழுதிய முதல் படம் 'நிழல்கள்' என்று பத்திரிகைகளில் கூற ஆரம்பித்து விட்டார். இது அப்பாவிற்கு கோபத்தை உண்டாக்கி விட்டது. இதனால் அவர் வைரமுத்துவுடன் இனி பணியாற்ற கூடாது என்று முடிவு செய்து, கடைசி வரை வைரமுத்துவை தன்னுடைய பேனரில் பயன்படுத்தவே இல்லை என்று பாலாஜி கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full