கேம் சேஞ்சேர் படத்தின் பாடல்கள் பட்ஜெட்டே இத்தன கோடியா - ஷாக்கில் ராம் சரண், தயாரிப்பாளர் சொன்ன தகவல்

By subhashini · 5/1/2025

ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் பாடல்கள் குறித்து தயாரிப்பாளர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது.

கேம் சேஞ்சர் படம்:

இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ராம்சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் .ஜே .சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி, உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் கதையை கொஞ்சம் டெவலப் செய்து சங்கர் இயக்கியிருக்கிறாராம்.

படம் பற்றிய தகவல்:

மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் வேலைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உருவான இப்படம் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாக காத்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை தயாரிப்பளார் தில் ராஜா தயாரித்து இருக்கிறார்.

தில் ராஜா பேட்டி:

இது இவருடைய ஐம்பதாவது திரைப்படம் என்பதால் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இதனுடைய பாடல்களுக்கு மட்டுமே பல கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பாடலுக்கு ஆன செலவுகளை குறித்து தில்ராஜ் சொன்னதை கேட்டு ராம் சரண் ஷாக் ஆனார். இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் தில் ராஜா, படத்தில் மொத்தமாக ஐந்து பாடல் இருக்கிறது. அந்த ஐந்து பாடல்களும் மொத்த பட்ஜெட் 75 கோடி. ஒவ்வொரு பாடல்களுடைய படப்பிடிப்பமே பத்திலிருந்து 12 நாட்கள் நடைபெற்றது.

பாடல் பற்றி சொன்னது:

பாடல்கள் வித்தியாசமாக இருந்தது. சங்கர் சார் ஒவ்வொரு பாடலையும் சரியாக டிசைன் செய்து எடுத்திருக்கிறார். படத்தில் வரும் ஒரு மெலோடி பாடலை நியூஸிலாந்தில் மட்டுமே எடுத்தோம். அதில் ஒரு புதிய முயற்சியையும் அவர் செய்திருக்கிறார். இதில் சவால்கள் எல்லாம் இல்லை. இந்த படம் என்னுடைய ஐம்பதாவது திரைப்படம். இதில் ஒரு சில ஸ்பெஷலான விஷயங்கள் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். சங்கர் சார் பிரம்மாண்டமாக ஒரு விஷயத்தை செய்வார். அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். இந்த படம் உருவாக 3.5 வருடங்கள் ஆனது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full