பிரம்மாண்டமாக நடந்த ஐசரி கணேஷ் மகளின் திருமணம் - 1000 பவுன் தங்கமா? ரொக்கம் எவ்வளவு தெரியுமா?

By subhashini · 2/6/2025

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தன்னுடைய மகளுக்கு கொடுத்திருக்கும் சீர்வரிசைகள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக திகழ்பவர் ஐசரி கணேஷ். இவருடைய தயாரிப்பு நிறுவனம்தான் வேல்ஸ் நிறுவனம். ஆரம்பத்தில் எஸ்.ஆர்.எம் யுனிவர்சிட்டி கூட சேர்ந்து தான் வேந்தர் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார்கள்.
அதற்கு பிறகு தான் வேல்ஸ் நிறுவனம் என்று வந்தது. வேல்ஸ் நிறுவனத்தின் மூலம் சினிமா மட்டும் இல்லாமல் கல்லூரிகளையும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார். எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வெந்து விந்து தணிந்தது காடு, கோமாளி, ஜோஷ்வா போன்ற பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி வசூலையும் அள்ளி குவித்து இருக்கிறது.
தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் மூக்கத்தி அம்மன் 2, விஜே சித்துவின் டாயங்கரம், ஜீனி போன்ற பல படங்களை தயாரித்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஐசரி கணேசனின் மகள் திருமணம் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐசரி கணேஷ் மகள் திருமணம்:

ஐசரி கணேசிற்க்கு ப்ரீத்தா என்ற மகள் இருக்கிறார். இவருடைய தந்தையின் நிறுவனத்திலும், சினிமா தயாரிப்பு பணிகளிலுமே ப்ரீத்தா முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு தான் இவருக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு கோலிவுட்டே படையெடுத்து இருந்தது. ரஜினிகாந்த், கமலஹாசன், ஷாலினி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மணிரத்தினம் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

திருமணம் பற்றி தகவல்:

கிட்டத்தட்ட இந்த திருமணத்தில் 25,000க்கும் மேற்பட்டோர் கலந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் சிறப்பு விருந்தினர்கள் மட்டும் இல்லாமல் பொதுமக்களுமே கலந்து கொண்டிருந்தார்கள். இருவருக்குமே பாரபட்சம் பார்க்காமல் ஒரே மாதிரியான விருந்தையும் மரியாதையும் ஐசரி கணேஷ் கொடுத்து இருந்தார். இந்த திருமணத்திற்காக பிரம்மாண்டமாக ஷெட் போட்டு நடத்தி இருந்தார். ஊரே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு இந்த திருமணத்தை நடத்தி இருந்தார். சோசியல் மீடியா முழுவதும் ஐசரி கணேஷ் மகளின் திருமணம் பற்றிய செய்திதான் உலவிக்கொண்டிருந்தது.

சீர் வரிசைகள்:

இதை தொடர்ந்து மாலத்தீவில் மிகப்பெரிய அளவில் திருமண வரவேற்பும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதிலும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து தன்னுடைய மகளின் திருமணத்தை ஜாம் ஜாம் என்று ஐசரி கணேஷ் நிறைவேற்றி வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தன் மகளுக்காக ஐசரி கணேஷ் கொடுத்திருக்கும் சீர்வரிசை பற்றிய தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அதாவது ஐசரி கணேஷ் தன்னுடைய மகள் ப்ரீத்தாவிற்க்காக ஆயிரம் சவரன் தங்க நகை, பல கோடி ரூபாய் ரொக்கமாக கொடுத்திருக்கிறார்.

ஐசரி கணேஷ் கொடுத்த பரிசு:

தன்னுடைய மகள் மற்றும் மருமகனுக்கு பிரம்மாண்டமான வீட்டையும் கொடுத்திருக்கிறார். அந்த வீடு சென்னை ஈசி ஆரில் பெரிய அளவில் ஒரு பீச் ஹவுஸ் ஆக கட்டப்பட்டிருக்கிறது. இதற்காக பல கோடி ரூபாய் ஐசரி கணேஷ் செலவு செய்தார் கூறப்படுகிறது. இந்த வீட்டில் மாடியில் நீச்சல் குளம், பெரிய தோட்டம், பூங்கா, வீட்டுக்குள்ளே மினி தியேட்டர் என பல வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வீட்டில் தான் தன்னுடைய மகளையும், மருமகனையும் ஐசரி கணேஷ் குடியேற்ற இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full