ஒரே நேரத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி - STR 49 பட அப்டேட் சொன்ன தயாரிப்பாளர் தாணு

By subhashini · 3/10/2025

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நுழைந்து பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து ஆண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார்.
சமீப காலமாக இவர் தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சிம்பு-கமல் நடித்த தக் லைப் படத்தை மணிரத்தினம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து சிம்பு தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் சிம்பு அவர்கள் ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

சிம்பு திரைப்பயணம்:

இந்த படத்தில் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக இந்த படத்தில் கயாடு நடிக்கிறார். மேலும், ஹீரோவாக கலக்கும் சந்தானம் சிம்புவுடன் இந்த படத்தில் இணைந்திருப்பது பலருக்குமே ஆச்சரியம்தான். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் தான் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின் சிம்புவின் 49 வது படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. படக்குழுவினருடன் சிம்புக்கு மனக்கசப்பு ஏற்பட்டதால் இயக்குனர் மாற்றம் என்று கூறப்படுகிறது.

str 49 படம்:

தற்போது சிம்புவின் 49-வது படத்தை வெற்றிமாறன் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது வடசென்னையில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. கென் கருணாஸுக்காக எழுதிய ராஜன் வகையறா என்ற கதையைத்தான் தற்போது சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கி இருக்கிறாராம். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குப்பின் வெற்றிமாறன் பிறந்தநாளில் சூப்பர் அப்டேட்டை தயாரிப்பாளர் கொடுத்து இருந்தார். அதன் பின் விருது விழாவில் கலந்து கொண்ட சிம்புவிடம் 'எஸ் டி ஆர் 49' அப்டேட் குறித்து கேட்டிருந்தார்கள். அதற்கு சிம்பு வெற்றிமாறன் சாரிடம் கேளுங்கள் என்று சொல்லியிருந்தார்.

கலைப்புலி எஸ்.தாணு பதிவு:

இந்நிலையில் இது தொடர்பாக கலைபுலி எஸ்.தானு பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும். இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full