விஜய் நல்ல பையன், அஜித் பைத்தியக்காரன், நன்றி கெட்டவன் - வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்.

By Rajkumar · 26/9/2023

விஜய் நல்லவர் ஆனால் அஜித் அப்படி இல்லை என்று பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான்.

இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும். தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம். தற்போது இருவருமே தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் விஜய்- அஜித் குறித்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருக்கிறது.

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டி:

பேட்டியில் அவர், அஜித் மாபெரும் நடிகர். வாழ்க்கையில் அவர் நடிப்பார். ஆனால், படத்தில் அவருக்கு நடிக்க தெரியாது. சும்மா வந்து அப்படி இப்படி என்று தொந்தியை காட்டிக் கொண்டு நடிப்பார் அவ்வளவுதான். 95 காலகட்டங்களில் அவன் என்னிடம் பணம் கேட்டான். நான் கொடுத்தேன்.நல்ல நடிகனாக வந்த பின்னர் எனக்கு டேட் தருகிறேன் என்று சொன்னார். ஆனால், தரவே இல்லை. மனிதனுக்கு எப்போதும் வாக்கு முக்கியம் தம்பி.

https://www.youtube.com/watch?v=n_3DHKZjKBU

விஜய் குறித்து சொன்னது:

அவன் ஜென்டில்மேன்னா? உங்களை நீங்களே அப்படி சொல்லிக் கொள்ளக்கூடாது. மரியாதையை விலை கொடுத்து வாங்க கூடாது. நீ உண்மையான ஜென்டில்மேன் ஆக இருந்தால் நீ என்னை கூப்பிட்டு பேசி இருக்க வேண்டும். நீ பேசவில்லை. ஆனால், விஜய் பொறுத்தவரை அவருக்கு தன்னடக்கம் உண்டு. அவர்தான் பெரிய ஆள் என்பது போல எல்லாம் பேசவே மாட்டார். இந்தியா முழுக்க பிரமோஷன் செய்ய வேண்டும் என்று சொன்னால் கூட அவர் செய்வார்.

அஜித் குறித்த விமர்சனம்:

விஜய் உடன் டீல் செய்வது ரொம்பவும் ஈசி. அவருக்கு எந்த விஷயத்தையும் பேசி புரிய வைத்துவிடலாம். அவரை பார்க்கவே முடியவில்லை என்று யாராவது சொல்கிறார்களா? சிலர் ஒலிந்து கொண்டிருக்கிறார்கள். சிலரெல்லாம் படம் நடித்ததோடு சென்றுவிடுவார்கள். அவன் எல்லாம் பைத்தியக்காரன். ஒரு படத்தில் நடிக்கிறாய். அந்த படத்தை பட குழுவோடு சேர்ந்து ப்ரமோஷன் செய்வதை விட உனக்கு என்ன பெரிய வேலை. அப்படி என்ன ஹீரோ நீ? உன்னை படங்களுக்கு புக் செய்யக்கூடாது. ரஜினி சார், கமல் சார் ப்ரொமோஷனுக்கு வருகிறார்கள். நீ என்ன அவர்களை விட பெரிய ஆளா? என்று கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full