ரஜினி, விஜயை விட அசோக் செல்வன் பெரிய ஆளா? தயாரிப்பாளர் அடிமைகளா? ஆவேசத்தில் கொட்டி தீர்த்த பிரபலம்

By subhashini · 29/7/2024

நடிகர் அசோக் செல்வனை தயாரிப்பாளர் திட்டி தீர்த்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே கோலிவுட் வட்டாரத்தில் இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே நிறைய சண்டை, சச்சரவுகள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தயாரிப்பாளர்- அசோக் செல்வனுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியிருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பிளேபாய் கதாபாத்திரத்தில் அசோக்செல்வன் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்திருக்கிறது.

இசை வெளியீட்டு விழா:

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். ஆனால், அசோக் செல்வன், அவந்திகா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அப்போது நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் திருமலை, புரமோஷனுக்கு கூட ஹீரோ அசோக்செல்வன் வரவில்லை. அவர் மட்டும் இல்ல இந்த படத்தினுடைய நாயகி அவந்திகாவும் வரவில்லை. இது ரொம்ப வருத்தத்திற்குரிய ஒன்று. டப்பிங் பேசுவதற்கு முன்பே அசோக்செல்வன் மீதம் இருக்கும் சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என்று எனக்கு நெருக்கடி கொடுத்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=oRQljIKh8OA

தயாரிப்பாளர் ஆவேசம்:

நாலு வருடங்களுக்கு முன்பு அவருக்கு 31 இலட்சம் கொடுத்தேன். அதற்கு வட்டி போட்டு பார்த்தால் கூட ஒரு கோடி ரூபாய் தான் வரும். ஆனால், தற்போது அவர் 2 கோடி வரை படங்களுக்கு சம்பளம் கேட்கிறார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் எந்த ஒரு நடிகனும், நடிகையும் முன்னுக்கு வர முடியாது. ரஜினிகாந்த், விஜய், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்களின் பிரமோஷனுக்காக ஓடி வருகிறார்கள். ஆனால், அசோக்செல்வன் இப்போது தான் வளர்ந்து வருகிறார்.

அசோக் செல்வனை திட்டிய காரணம்:

மேலும், அவர் அவ்வளவு நெருக்கடி கொடுத்தும் நாங்கள் பணத்தை கொடுத்தோம். ஆனால், அவர் படத்தினுடைய புரமோஷனுக்கு வரவில்லை. போன் செய்தாலும் அவர் எடுக்காமல் இருக்கிறார் என்று கடுமையாகக் கண்டித்து பேசியிருந்தார். இவரை அடுத்து தயாரிப்பாளர் கே ராஜன், அசோக் செல்வனை திட்டி தயாரிப்பாளர்கள் என அடிமைகளா? என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் தற்போது இவர்களின் இந்த கருத்து தான் இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது.

அசோக் செல்வன் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்து ஓ மை கடவுளே, போர் தொழில் போன்ற படங்கள் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். சமீபத்தில் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'ப்ளூ ஸ்டார்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full