மணிவண்ணன் சார் ஒரு ஜீனியஸ், ஆனா அவர்கிட்ட பிடிக்காத விஷயம் - 'அமைதிப்படை' தயாரிப்பாளர் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சத்யராஜ். சத்யராஜ்-மணிவண்ணன் கூட்டணியில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் அமைதிப்படை. இந்த படத்தில் மணிவண்ணன், ரஞ்சிதா, கஸ்தூரி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தை மணிவண்ணன் இயக்கி இருந்தார். இந்த படத்தை மீண்டும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி தான் திரைக்கு வர இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக ப்ரமோஷன் ஆனார் ஒளிப்பதிவாளர் யுகே செந்தில்குமார். இவர் சுந்தர் சி யின் ஆஸ்தான கேமரா மேனாக இருந்தவர். அமைதிப்படையும் மூலம் தான் இவர் தயாரிப்பாளர் ஆனார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் செந்தில் குமார்,
நான் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்திருந்தாலும் சினிமாவை கற்றுக் கொண்டது மணிவண்ணன் சாரிடம் தான். அவரிடம் புது மனிதன், கவர்மெண்ட் மாப்பிள்ளை என்று சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தேன்.
அமைதிப்படை படம்:
அந்த சமயத்தில்தான் உதவி இயக்குனர்களான சீமான் சார், சுந்தர் சி, செல்வபாரதி
என பலர் இருந்தார்கள். என்னை ஒரு தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தவர் மணிவண்ணன் சார். அமைதிப்படையில் நானும் ஒரு தயாரிப்பாளர். நான் தயாரித்த ஒரே ஒரு படம் இதுதான். மணிவண்ணன் ஒரு ஜீனியஸ். அந்த நேரத்தில் நான் கருப்பு வெள்ளை படத்துக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தேன். அதோட படப்பிடிப்பும் அமைதிப்படையின் சூட்டிங்கும் பொள்ளாச்சி பகுதியில் தான் நடந்து கொண்டிருந்தது. அதனால் மாதத்தில் பாதி நாட்கள் இரண்டு படப்பிடிப்புக்கும் மாறி மாறி இருந்தேன்.
செந்தில்குமார் பேட்டி:
மணிவண்ணன் சார் ஞாபக சக்தி பிரம்மிக்க வைக்கும். எல்லாமே அவர் மைண்டில் ஏத்தி வைத்திருப்பார். அவர் மைண்டில் என்ன கதை இருக்கும், என்ன காட்சிகள் யோசிப்பார் என்று எங்கள் யாருக்குமே தெரியாது. இந்த படத்தினுடைய கதை உருவானதே எதைச்சையாகத்தான் உருவானது. அவருக்கு தோனின விஷயத்தை தான் எடுத்தார். ஒவ்வொரு சீனுமே திடீர் திடீரென்று அவர் யோசித்து இருப்பது தான். படத்தில் சில இடங்களில் சத்யராஜ் பேசும் வசனங்கள் எல்லாமே அவர் சொன்னது தான். அதேபோல சத்யராஜ் சாருக்கும், மணிவண்ணன் சாருக்கும் இடையேயான பாண்டிங் எல்லோருக்குமே தெரிந்ததுதான்.
படம் பற்றி சொன்னது:
மணிவண்ணன் சார் உதவி இயக்குனர்களுக்கு நல்ல சாப்பாடு வாங்கி கொடுப்பார். என்ன தேவையோ அதெல்லாம் செய்து கொடுப்பார். ஆனால், அவரிடம் பிடிக்காத விஷயம் ஒன்னு இருக்கு. அவருக்கு கோபம் வந்தால் அடி வெளுத்து வாங்கிவிடுவார். அப்படி அவரிடம் அடி வாங்கின எல்லோருமே வெற்றி கரமாக இருக்கிறார்கள். நான் எல்லாம் அவரிடம் கணக்கில்லாமல் அடிவாங்கி இருக்கிறேன். ஆனாலும் அவரிடம் பணியாற்றியது ஒரு அழகான தருணம் தான். அமைதிப்படை மாதிரி இன்னொரு படம் எடுக்கவே முடியாது. இப்போ உள்ள அரசியல் சூழலுக்கு ரொம்ப பொருத்தமாக கனெக்ட் ஆகக்கூடிய படமாக அமைதிப்படை இருக்கும் என்று கூறி இருக்கிறார்.