நான் விஜய்யின் பினாமியா? ஆனா விஜய் ஹெல்ப் பண்ணாரு - விஜய்யின் மாமா பிரிட்டோ

By krithika · 29/1/2025

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பார் சேவியர் பிரிட்டோ அளித்துள்ள பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடத்துள்ள படம் தான் 'நேசிப்பாயா' இப்படத்தில் தான் நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளைத்தான் திருமணம் செய்து இருக்கிறார்.

கடந்த பொங்கலுக்கு வெளியான 'நேசிப்பாயா' திரைப்படத்தை தயாரித்து, தனது மருமகனை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள்தான் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த படம் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் குறித்தும், நடிகர் விஜய்க்கும் அவருக்கும் என்ன உறவு என்பதையெல்லாம் சேவியர் பிரிட்டோ பகிர்ந்துள்ளார்.

சேவியர் பிரிட்டோ பேட்டி:

இந்த பேட்டியில் அவர், என்னோட மாமியாரும் விஜய்யின் அப்பா எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களும் சகோதர சகோதரிகள். ஆரம்பத்தில் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தும் போது எனக்கு அவரை நன்றாக தெரியும். விஜயகாந்தையும் விஜயையும் வைத்து 'செந்தூரப்பாண்டி' படம் பண்ணும் போதே அவர்களுக்கு சில நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்போதுதான் அவர்கள் என்னை சினிமாவுக்கு அழைத்தனர். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, 'ரசிகன்' படத்தையும் என்னையே விஜய்யின் அப்பா எஸ். ஏ. சந்திரசேகர் பண்ணச் சொன்னார்.

https://www.youtube.com/shorts/zaBX1OSYSA0

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்:

எனக்கு சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது. என்னோட தொழிலே வேறு. என்னோட மனைவி மூலம் தொடங்கப்பட்ட கால் பந்தாட்ட போட்டி சொதப்பியது. அதனால் எங்களுக்கு சுமார் 90 கோடி ரூபாய் இஷ்டம் ஏற்பட்டது. அப்போதுதான் விஜய் எனக்கு உதவும் விதமாக தன்னுடைய 'மாஸ்டர்' படத்தை எடுத்துக் பண்ணும் வாய்ப்பை எனக்கு தந்தார். மற்றபடி தொழில் ரீதியாக எனக்கும் அவருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

மாஸ்டர் படம் குறித்து:

மேலும், என் வாழ்க்கையில் யாருமே எனக்கு பினாமி கிடையாது. இரண்டாவது என்னுடைய கம்பெனி அதிக இன்கம் டேக்ஸஸை கட்டும் ஒரு கம்பெனி. மூணாவது வந்து கம்ப்ளையன்சஸ்ல , டேக்ஸ் கட்டுவதில் எல்லாத்திலேயும் எங்க கம்பெனி நம்பர் ஒன். ஆரம்ப காலத்தில் இருந்தே எதையும் கரெக்டாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அது மட்டும் இல்லாமல் இந்த மாஸ்டர் படம் எப்படின்னா, விஜய் கூப்பிட்டு நான் எதிர்பார்க்காத நேரத்தில் எனக்கு கொடுத்தாங்க. நான் எனது பிசினஸில் எப்போதும் சிறந்ததை கொடுத்து வருகிறேன்.

விஜய்க்கு நான் பினாமியா:

எதற்காக ஒரு படத்தை நான் நம்பி இருக்க வேண்டும். ஆனால், விஜய் நான் எதிர்பார்க்காத நேரத்தில் எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு காரணமே நான் முன்னாடி காலத்தில் அவருக்கு கூட இருந்தது. முதல்லயே இந்த பிளான் எல்லாம் இருந்தது. அவரைப் பொறுத்தவரையில் அவர் கடின உழைப்பால் மேலே வந்திருக்காரு. நானும் கடின உழைப்பால் என்னுடைய துறையில் மேலே வந்திருக்கிறேன். அதை தவிர எங்களுக்குள்ள ஒன்றுமில்லை. அவருக்கு நான் பினாமி என்பதெல்லாம் 110% பொய்யான தகவல். அது வேண்டாதவங்க பேசுறது என்று சேவியர் பிரிட்டோ கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full