லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்திட வேண்டும்' - நீதிமன்றத்தில் வழக்கு. காரணம் என்ன?

By S.Dhilip Kumar · 3/1/2024

லியோ படத்திற்கு தடை விதித்து லோகேஷ் கனகராஜை விசாரிக்க வேண்டும் என்று நபர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் சம்பவம் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தட், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள்.

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. பின் லியோ படத்தின் வெற்றியை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக பட குழு கொண்டாடி இருந்தது. இந்த விழாவில் விஜய், லோகேஷ், திரிஷா உட்பட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

லியோ படம்:

பின் இந்த படம் ஓடிடியிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த நிலையில் லியோ பட இயக்குனர் மற்றும் படக்குழு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜமுருகன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு போட்டிருக்கிறார். அந்த மனுவில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கலவரம், சட்டவிரோத செயல்கள், கார் மற்றும் இரு வாகனங்களை அதிகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் போன்ற பல வன்முறை காட்சிகள் வைக்கப்பட்டிருக்கிறது.

லியோ படம் மீது வழக்கு:

இந்த காட்சிகள் எல்லாம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை தூண்டும் வகையில் இருக்கிறது. இதை லோகேஷ் கனகராஜ் தான் செய்திருக்கிறார். இது போன்ற படங்களை எல்லாம் தணிக்கை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை படமாக்கியதற்கு இந்திய தண்டனை சட்டப்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் படக்குழு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

நீதிபதி உத்தரவு;

லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் கூறியிருக்கிறார். இதனை அடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் இந்த வழக்கின் விசாரணை தேதியை வேறு ஒரு தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் நடிக்கும் படம்;

தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சினேகா, பிரசன்னா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்த நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு கோட்(GOAT) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full