தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஹிப் ஹாப் ஆதி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளரும் ஆவார். தற்போது இவர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிடி சார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதியே இசையமைத்திருக்கிறார். இது இவருடைய 25-ஆவது படம் ஆகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் தியாகராஜன் என்பவர் இருக்கிறார். இவர் கல்லூரி, பள்ளி எல்லாம் நடத்தி வருகிறார். அந்தப் பள்ளியில் பி டி வாத்தியாராக படத்தின் நாயகன் ஹிப்ஹாப் ஆதி வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் படத்தில் ரொம்ப பயந்த சுபாவமாக நடித்திருக்கிறார். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அங்கிருந்து ஓடி விடுவார்.

Advertisement

இப்படி இருக்கும் போது தான் ஆதியின் தங்கையாக அனிகா நடித்து இருக்கிறார். இவருக்கு கல்லூரி நிறுவனத்தின் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது. இதனால் அவர் தற்கொலையும் செய்து கொள்கிறார். ஆதி உடைய தங்கைக்கு என்ன பிரச்சனை? அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தன்னிடம் இருக்கும் பிரச்சனையை சமாளித்து ஆதி கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

சமுதாயத்திற்கு ஒரு மெசேஜை கொடுக்கும் வகையில் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருப்பது பாராட்டு. பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை காட்டும் விகிதத்தில் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். ஆனால், அதில் சுவாரசியமாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சின்ன குழந்தை முதல் 40 வயது பெண்கள் வரை சமுதாயத்தில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதை அவர்கள் எப்படி கடந்து வருகிறார்கள் என்பது கதை..

Advertisement

இதில் வழக்கம்போல் ஆதி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் மற்ற நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். கதாநாயகி காஷ்மீரா மற்றும் இன்னும் கொஞ்சம் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வில்லனாக வரும் தியாகராஜன் மிரட்டி இருக்கிறார். மேலும், படத்தில் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருக்கிறது.

Advertisement

ஆதி மற்றும் அவருடைய தங்கையாக நடித்த அனிகாவின் நடிப்பு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. படத்தில் பாடல்கள் பெரிய அளவு கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக பிடி சார் இருக்கிறது.

நிறை:

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை படத்தில் இயக்குனர் காண்பித்திருக்கிறார்

ஹிப்ஹாப் ஆதி, அனிகாவின் நடிப்பு சிறப்பு

கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருக்கிறது

பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் ஓகே

குறை:

சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது

கதைக்களத்தில் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்

பாடல்கள் பெரிதாக கவரவில்லை

மொத்தத்தில் பிடி சார் – முயற்சி

Advertisement