இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த கேம் PUBG(Player’s Unknown Battle Ground). போர்க்களத்தில் முகம் தெரியாத சிலருடன் இணைந்து எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இந்த PUBG விளையாட்டை விளையாடாதவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இந்த விளையாட்டிற்கு பலரும் அடிமையாகி இருந்தார்கள். மேலும், இந்த விளையாட்டில் பல சிறுவர்கள் வீட்டிற்கு தெரியாமல் பல லட்சம் பணத்தை செலவு செய்து இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்து இருந்தது.

இது இளசுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் கொரியன் வெர்ஷன் மற்றும் VPN பயன்படுத்தி பலர் விளையாடி வந்தனர். இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்த முன்பே இதனை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மதன். சென்னை அருகே உள்ள வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் பப்ஜி மதன். இவருக்கு 29 வயது ஆகிறது. இரு யூடியூப் சேனல்களை நடத்தி வந்தார்.

Advertisement

பப்ஜி விளையாட்டை யூடியூப்பில் வெளியிட்டு பணம் சம்பாதித்து மட்டுமில்லாமல் பெண்கள், சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டுகளில் மதனை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இவர் கடுமையான முதுகுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. மதன் யூடியூப் சேனலில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசும் வீடியோக்கள், ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தன. இதுகுறித்து வடபழனி சேர்ந்த பிகே அபிஷேக் ரவி என்பவர் சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அவர் புகார் அளித்த அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் சேலத்தில் மதனை கைது செய்யப்பட்டது. இதன் பின் மதன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பப்ஜி மதன் முதுகு வலியால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு சிறையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு வலி அதிகமாக ஏற்பட்டதால் மதனை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement