உங்களுக்கும் மாயாக்கும் - விஜய் டிவியில் இருந்து கொண்டே கமலை மாயாவுடன் ஒப்பிட்டு அசிங்கப்படுத்திய புகழ் மற்றும் குரேஷி.

By Ajju · 13/1/2024

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 102 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

https://twitter.com/Shinyshinysss/status/1746032943381057841

தற்போது மாயா, தினேஷ், விஷ்ணு, மணி மற்றும் அர்ச்சனா ஆகிய 5 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். இன்னும் இந்த நிகழ்ச்சி சில நாட்கள் தான் இருக்கிறது. இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சயமான நபர்களில் ஒருவராக நுழைந்தவர் தான் மாயா.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் சில காட்சியில் நடித்திருந்தார். இந்த சீசனில் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு போட்டியாளர்கள் என்றால் அதில் டாப் மூன்று இடத்தில் மாயாவிற்கு தான் முதலிடம். இவர் பல முறை நாமினினேட் ஆன போது இவர் நிட்சயம் வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

https://twitter.com/im_anushri_11/status/1746058715458163163

ஆனால், ஒவ்வொரு வாரமும் இவர் தப்பித்துக்கொண்டே வந்து தற்போது இறுதி கட்டம் வரை வந்துவிட்டார். மாயா இப்படி இறுதி வரை வர காரணம் கமல் தான் என்று சமூக வலைதளத்தில் அடிக்கடி கமல் கேலிக்கு உள்ளானார். இப்படி ஒரு நிலையில் மாயாவிற்கு கமல் எந்த அளவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதை கலாய்க்கும் விதமாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் புகழும் குரேஷியும் கலாய்த்து உள்ளனர்.

இதில் குரேஷி கமல் போல் மிமிக்கிரி செய்ய, புகழ் ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறார். உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்ன என்று கேட்டால் மாயாஜால் என கூறுகிறார். பிடித்த படம் மாயாபஜார், தமிழ்நாட்டில் பிடித்த இடம் மாயவரம் என கூறுகிறார். இப்படி கமல் ஹாசன் மாயாவையும் வைத்து ட்ரோல் செய்யும் விதமாக புகழ் குரேஷி பேசிய தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/priyajay2010/status/1745967115595575379

இது ஒருபுறம் இருக்க னேகமாக இதுதான் கமலுடைய கடைசி சீசன் என்று நம்பகத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அடுத்த தொகுப்பாளரை தேடும் வேட்டையில் விஜய் டிவி இறங்கிவிட்டது. தற்போது வரை 5 பிரபலங்களிடம் விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து பேசப்பட்டிருக்கிறது. அதில், பிக் பாஸ் ஓ டிடி யில் வெளியாகியிருந்தபோது கமலுக்கு பதில் தொகுப்பாளராக இருந்தவர் சிம்பு. அவர் சிறப்பாக கொடுத்திருந்தார். கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமான ஆக்சன் கிங் அர்ஜுன் நடிகர் சரத்குமார் மாதவன் ஆகியோரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full