கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த வாரம் வியாழனன்று மதியம் மூன்று மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

முதல் வீடியோ :

அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ்-இ-மொஹமத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச்செய்தனர் 40 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.

Advertisement

இந்நிலையில் புல்வாமா தாக்குதலின் போது cctv கேமராவில் பதிவான வீடியோ என்று இணையத்தில் ஒரு வீடியோ படு வைரலாக பரவி வந்தது. ஆனால் உண்மையில் அந்த வீடியோ
புல்வாமா தாக்குதலின் வீடியோ என பரவும் இரண்டு வீடியோவும் தவறானவையே. பிற நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை காஷ்மீரில் நிகழ்ந்ததாக பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டாவது வீடியோ :

முதல் வீடியோ 2017 -ல் எகிப்து நாட்டில் 100 கிலோ வெடி மருந்துடன் வந்த காரை ராணுவ பீரங்கி தடுத்ததோடு, அங்கிருந்த 50 மக்களின் உயிரையும் காப்பாற்றியுள்ளது. இரண்டாவது வீடியோ 2007 ஆம் ஆண்டில் செப்டம்பர் 2-ம் தேதி ஈராக் நாட்டில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தின் போது பதிவான வீடியோ இந்தியாவில் நடந்ததாக பகிரப்படுகிறது.

Advertisement
Advertisement