தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தேவர்கொண்டா “நூவில்லா” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார். பின்னர் இவர் கதாநாயகனாக நடித்த முதல் படமான “எவட சுப்பிரமணியம்” என்ற திரைப்படம் ஹிட் அடிக்கவே `இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பில்லி சோப்புலி, துவாரகா மற்றும் அர்ஜுன் ரெட்டி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் அடித்து இவரை பிரபலமாக்கியது. மேலும் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பப் பட்டுவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன்3ல் பார்வயாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடதக்கது

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த “லைகர்” திரைப்படமானது பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி படுதோல்வியடைந்தது. இந்த தோல்வி படக்குழுவிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 120கோடிக்கு மேல் செலவு செய்து உருவாக்கப்பட்ட இப்படமானது பெரும் தோல்வியை தழுவி 30 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. மேலும் சாட்டிலைட் மீடியாக்களில் காப்புரிமைகளை சேர்த்தாலும் பாட தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருந்தது

Advertisement

குறிப்பாக இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தெலுங்கு பிரபல நடிகை சர்மிக்கு பெரிய இழப்பு என்று கூறப்படுகிறது. சர்மி தான் சம்பாரித்த அனைத்தயும் இப்பாடத்தில் போட்டிருந்தார் ஆனால் படமானது தொடக்கத்திலேயே தோல்வியுற்றதால் நடிகர் விஜய் தேவர்கொண்டா தான் சம்பளமாக வாங்கிய மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்தாக கூறப்ப்டுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலிவுடல் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட “லால் சிங்” திரைப்படம் வெளியான நாளிலேயே மண்ணை கைவியதை அடுத்து அப்படத்தில் நடித்திருந்த அமீர் கான் தான் வாங்கிய மொத்த பணத்தையும் திரும்ப கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “லைகர்” திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சர்மி படத்தை இணைந்து தயாரித்திருந்த நிலையில் `இப்படத்திற்கான அவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது? என காங்கிரசு கட்சியை சேர்ந்த பக்கா ஜுட்ஸ்ன் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இந்த பணமானது அரசியல் வாதிகளின் கருப்பு பணம் என்றும் இப்பணத்தை வெல்லையாக மாற்றவே திரைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் நாடகமாடியுள்ளனர் என்று பக்கா ஜுட்ஸ்ன் அமலாக்கத்துறையில் புகார் அளித்திருந்தார்.

Advertisement

இத்தகைய நிலையில்தான் அமலாக்கத்துறையில் இருந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சர்மியை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆஜரான இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட 15 மணி நேரம் விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் இவ்வளவு அதிகமான பணம் எப்படி வந்தது என்று சில முக்கியமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படியிருக்கும் போது நடிகர் சிம்புவுடன் நடித்த நடிகையான சர்மியா இப்படி செய்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Advertisement