புஷ்பா 2: சர்ச்சைக்குள்ளான ஃபீலிங்க்ஸ் பாடல்- பாடலாசிரியர் விவேகா கொடுத்த விளக்கம், முழு விவரம் இதோ

By subhashini · 20/12/2024

கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் புஷ்பா 2 படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.
அதனைத் தொடர்ந்து , இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய பாடல்களுமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

புஷ்பா 2 :

இந்த படத்தினுடைய பாடல்களை தமிழில் எழுதியவர் பாடல் ஆசிரியர் விவேகா. புஷ்பா 1 பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்ததற்கு இவர் தான் காரணம். புஷ்பா 2 படத்திலும் இவர் தான் பாடலாசிரியராக பணி புரிந்திருக்கிறார். குறிப்பாக பீலிங்ஸ் பாடலில் வரும் 'மல்லிகா பாணத்தே அம்புகளோ கண்முன தும்புகளோ' என்ற வரிகள் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையில் இருந்து எடுக்கப்பட்டது என்று சோசியல் மீடியாவில் கூறப்பட்டு வருகிறது.

பாடலாசிரியர் விவேகா பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பாடலாசிரியர் விவேகா, பீலிங்ஸ் பாடலில் வருவது நெடுநல்வாடை வரிகள் கிடையாது. தவறான செய்திகளை சோசியல் மீடியாவில் பரப்பாதீர்கள். சமூக வலைத்தளங்களில் இது மாதிரி நிறைய விஷயங்கள் போடுகிறார்கள். நான் இதற்கு முன்னாடி கங்குவா திரைப்படத்தில் ஆதி நெருப்பே பாடல் எழுதியிருந்தேன். இதில் இலக்கிய வரிகள் வரும். அதனால் பீலிங்ஸ் பாடலில் அதே மாதிரி இலக்கிய வரிகள் இருக்கு என்று நினைத்து கொண்டார்கள். ஆனால், இந்த பாடலின் தொடக்கத்தில் வருவது மலையாள வரிகள். கடந்த 18 வருடங்களாக டிஎஸ்பி சாரோட எல்லா படங்களுக்குமே நான் தான் பாடல் எழுதுகிறேன்.

டிஎஸ்பி குறித்து சொன்னது:

என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதனால் தான் அவருடன் இத்தனை ஆண்டுகள் பயணிக்க முடிகிறது. எங்களுடைய கூட்டணியில் வந்த எல்லா பாடல்களுமே வெற்றி அடைந்திருக்கிறது. இப்போ ஃபேன் இந்தியா படங்கள் அதிகமாக வருவதால் அந்த படங்களிலும் தொடர்ந்து நான் எழுதுகிறேன். புஷ்பா 1 பாடல்கள் மீது எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், அந்த படத்தினுடைய பாடல்களெல்லாம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. உலக அளவிலும் வெற்றி அடைந்தது. புஷ்பா என்ற பெயர் பிராண்டாக மாறியது.

புஷ்பா பாடல்கள்:

புஷ்பா முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்திலும் வரும்னு எதிர்பார்த்ததால் சப்ரைஸ் இல்லாமல் போய்விடும். கம்போசிங் உட்காரும்போதே பாடல்கள் அனைத்துமே வேற மாதிரி இருக்கணும் என்று டிஎஸ்பி சார் சொன்னார். இரண்டாம் பாகத்தின் பாடல்கள் அனைத்துமே படத்தில் வரும் சூழ்நிலைகளை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டது. மேலும், படத்தினுடைய விஷுவல் பெரிய அளவு வெற்றியை கொடுத்திருக்கிறது. படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்று இருக்கிறது. சோசியல் மீடியாவில் இன்னைக்கு ட்ரெண்டிங்கில் புஷ்பா பாடல்கள் தான் இருக்கிறது என்று நெகிழ்ச்சியாக பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full