போற போக்க பாத்தா எல்லா கணவரும் இதையே கண்டினுயூ பண்ண வச்சிருவாங்க போல.

By Rajkumar · 27/3/2020

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. முதன் முதலாக இந்த கொரோனா வைரஸ் சீனாவில் தான் பரவ தொடங்கியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தான். இந்தியாவில் 639 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது.

https://www.instagram.com/p/B9woJmepUvV/

இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள் இருப்பதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : சேது இறப்பிற்கு காரணம் அதுவல்ல. வதந்திகளை பரப்பாதீர்கள். டாக்டர் அஸ்வின் வேண்டுகோள்.

வீட்டில் இருப்பதால் தனிமை போர் அடிக்காமல் இருப்பதற்காக அனைவரும் புத்தகங்கள் படிப்பது, பெயிண்டிங் பண்ணுவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, சமைப்பது மற்றும் சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்வது என்று பல விஷயங்களை செய்து வருகிறார்கள். மேலும், சில பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களையும், புதுப்புது வீடியோக்களையும் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர் சிஜு வில்சன் அவர்கள் தன் மனைவியை அழகு படுத்தும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். சமீபத்தில் கூட இவர் சமையல் செய்து தன் மனைவிக்கு உதவி செய்து இருந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவியை அழகுபடுத்த ஐப்ரோ செய்துள்ளார்.

https://www.instagram.com/p/B-HNo9epdBc/

தற்போது அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இதுகுறித்து அவர் கூறியிருப்பது, நீங்கள் வீட்டில் இருக்கும் போது புதிய புதிய திறன்களை கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனைவிக்கு உதவுங்கள் என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து பலரும் நடிகர் சிஜு வில்சனை பாராட்டி வருகின்றனர்.

பிரேமம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சிஜு வில்சன். இவர் முதலில் குறும் படங்களில் நடித்து வந்தார். அல்போன்ஸ் புத்ரனின் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். பிரேமம் படத்தில் இவர் நடிகர் நிவின் பாலி நண்பராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஸ்ருதி என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் மே மாதம் 29 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full