'லப்பர் பந்து' சாதி பற்றிய படங்கள்? இயக்குனர் சொன்ன வார்த்தை- மனம் திறந்த இயக்குனர் ஆர்.கே செல்வமணி
லப்பர் பந்து படம் குறித்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டிஎஸ்கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்துமே சிக்ஸர் தான். இவர் விளையாடும் டீம் தான் கோப்பையை தட்டிச் செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் பந்துவீச்சில் பட்டய கிளப்புபவர்.
லப்பர் பந்து படம்:
இவர் பந்து வீசினால் பேட்டிங் பண்ணும் போது அனைவருமே தடுமாறுவார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தினேஷுடைய திறமையை தெரிந்த ஹரிஷ் கல்யாண் எப்படியாவது அவரை விக்கெட் எடுக்க வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், சரிக்கு சரி என்று தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.
ஆர்.கே செல்வமணி பேட்டி:
மேலும் சமூகத்தில் நடக்கும் ஆதிக்கத்தையும் எதார்த்தமாக கூறியிருக்கும் இப்படம் பலரது பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜயகாந்தினுடைய தீவிர ரசிகராக கெத்து தினேஷ் வரும்போது 'நீ பொட்டு வெச்ச தங்க குடம்' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்காக லப்பர் படம் திரையிடப்பட்டிருந்தது. அப்போது படத்தை பார்த்துவிட்டு இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர்.கே செல்வமணி, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக வந்து பெரிய வெற்றி பெற்றிருக்கிறது லப்பர் பந்து படம். ஒரு கேப்டன் படத்தை பார்த்தது போல எனக்கு இருந்தது.
இயக்குனர் குறித்து சொன்னது:
இயக்குனரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு தரப்பினருக்கு மட்டும் படத்தை எடுக்காமல் அனைத்து தரப்பினரின் மத்தியிலும் கொண்டாடும் வகையில் படங்கள் இருக்க வேண்டும். கருத்துக்களை சொல்லும் போது எதிரியை கூட மனம் கலங்க வைக்கும் விதமாக சொல்ல வேண்டும். அதை இந்த படத்தில் இயக்குனர் சிறப்பாக எடுத்து இருக்கிறார். இந்த படம் ஜாதி கொடுமையை வேடிக்க பார்த்தவனின் பார்வையில் எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுடைய பார்வையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அழுத்தமாக தான் இருக்கும். இரண்டுக்குமே வேறுபாடுகள் இருக்கிறது என்ற இயக்குனர் தமிழரசன் சிறப்பாக பேசியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=TVcViyE2AWw
சினிமா நிலைமை:
அதுதான் என்னுடைய நிலைப்பாடும். எதிரிக்கு கூட மரியாதையை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த படைப்பு சிறப்பாக இருக்கும். அதை லப்பர் பந்து செய்திருக்கிறது. அதனால் தான் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாராட்டையும் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் அனைவருமே நடிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரிக்க வேண்டும். அப்போது தான் லப்பர் பந்து போன்ற நல்ல திரைப்படங்கள் வரும். நடிகர்களை விட கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.