விஜய்க்கு ஓராயிரம் பேர் இருக்காங்க ஆனா சங்கீதாவுக்கு - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் மாமா
விஜய்- சங்கீதா உறவு விரிசல் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் மாமா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது.
இந்த படத்தை தற்போது ‘தளபதி 69’ என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.இது தான் இவரின் கடைசி படம். இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இவர் அரசியலுக்கு வருவது சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் பீஸ்ட் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்-சங்கீதா விவாகரத்து:
இந்த படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை போடப்பட்டது. இந்த படத்தின் பெயர் ஜனநாயகன். இந்த படத்தினுடைய போஸ்டர் 76 வது குடியரசு தினமான நேற்று தான் வெளியாகியிருந்தது. இதை அடுத்து இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இதற்கிடையில் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை பிரிந்து வாழ்கிறார் என்றும், இருவரும் விவாகரத்து செய்துவிட்டார் என்றும், விஜய் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றெல்லாம் சர்ச்சைகள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. ஆனால், இது தொடர்பாக விஜய் எந்த ஒரு பதிலையும் கொடுக்கவில்லை.
ஆர்.செல்வகுமார் பேட்டி:
இந்நிலையில் இது குறித்து விஜயின் மாமாவும் ஒளிப்பதிவாளரும் ஆன ஆர்.செல்வகுமார் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், என்னைவிட விஜய் பற்றி ஊர் மக்களுக்கு தான் நன்றாக தெரியும். அவர் எங்கே செல்கிறார், நடக்கிறார், எத்தனை மணிக்கு வீட்டிற்கு வருகிறார், வெளியே எப்போ போகிறார் என அனைத்து தகவல்களையுமே வீட்டில் இருப்பவர்களை விட சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் தான் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமே தெரிந்து விடுகிறது.
விஜய்-சங்கீதா உறவு:
நாங்களே பல விஷயங்களை சோசியல் மீடியாவில் பார்த்து தான் தெரிந்து கொள்கிறோம். அதோடு சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் அவர்களுடைய வீடியோக்கள் எல்லாம் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக எதையெதையோ எழுதி பேசி அழகாக டைட்டிலையும் வைத்து வெளியிடுகிறார்கள். விஜய் குடும்பத்தோடு தான் வாழ்கிறார். அதில் எந்த மாற்றமுமே கிடையாது. அவரவர்கள் அவரவர்களது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஜயினுடைய மகள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=M6UDmvTODYs
சங்கீதா குறித்து சொன்னது:
அவருடைய மகன் லண்டனில் படித்து முடித்துவிட்டு தற்போது இயக்குனராக தன் படத்தின் வேலையில் பிஸியாக இருக்கிறார். இப்படி இருக்கும்போது ஒரு அம்மா குழந்தையை பார்த்துக் கொள்வாரா? புருஷனை பார்த்துக்கொள்வாரா? புருஷனை பார்த்துக் கொள்வதற்கு ஓராயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், பிள்ளையை யார் பார்த்துக் கொள்வார்? ஒரு தாயால் மட்டும் தான் முடியும். அதுவும் பெண் குழந்தையாக இருக்கிறார். தன்னுடைய மகளின் படிப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தான் சங்கீதா அவருடன் வசித்து வருகிறார். ஆனால் இதை சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் ஊதி ஊதி ஏதேதோ கதைகளை கட்டி வருகிறார்கள். அதில் எதுவும் உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார்.