என்னை பற்றி ட்ரோல், மீம்ஸ் போடுபவர்களுக்கு நன்றி - 'கூலி' பட நடிகை ரச்சிதா ராம் உருக்கம்

By subhashini · 18/8/2025

கூலி பட நடிகை நடிகை ரச்சிதா ராம் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது உருவாகி இருக்கும் படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கூலி படம்:

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனைகளையும் செய்து கொண்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே மக்கள் மத்தியில் பெரிதாக பரிச்சயம் இல்லாத நடிகர்களை வைத்து சில சப்ரைஸ் காட்சிகள் கொடுப்பது வழக்கம். இதற்கு முன்பு இவர் கமலின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது.

ரச்சிதா ராம் குறித்த தகவல்:

தற்போது கூலி படத்தில் கல்யாணி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது. இந்த கல்யாணி ரோலில் நடித்தவர் நடிகை ரச்சிதா ராம். கூலி படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டை பெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ரச்சிதா ராம் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், தமிழ் சினிமாவில் எனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
கூலி படத்தில் கல்யாணி கதாபாத்திரத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

View this post on Instagram

A post shared by R R (@rachita_instaofficial)

ரச்சிதா ராம் பதிவு:

விமர்சனங்களும் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்த அன்பும் என்னை பிரமிப்பில் ஆழ்த்திருக்கிறது. ஊடகங்கள், விமர்சனங்கள், ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ் போடுபவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். லெஜெண்ட் உடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். படத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

கூலி படத்தின் கதை:

படத்தில் வில்லன் நாகார்ஜுனா விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தன்னுடைய ஆட்களை வைத்து தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். நாகர்ஜுனாவிற்கு வலது கையாக தான் சௌபின் இருக்கிறார். இவர் போலீசுக்கு தகவல் சொல்பவர்களை எல்லாம் கொன்று அந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார்.
இதற்கிடையில் ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜ் இறந்த செய்தி வருகிறது. அப்போதுதான் தன்னுடைய நண்பனின் சாவில் மர்மம் இருப்பதை ரஜினிகாந்த் கண்டுபிடிக்கிறார். சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசனின் துணையோடு தன் நண்பன் சத்யராஜை கொண்டவர்களை கண்டுபிடிக்க ரஜினிகாந்த் முயற்சிக்கிறார். அதற்குப் பின் வில்லன் நாகர்ஜுனா இடத்திற்கே சென்று ரஜினி சந்திக்கும் சவால்கள் தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full