கழட்டி விட்ட விஜய் டிவி.! வேறு தொலைக்காட்சியில் புதிய தொடருக்கு வந்த ரஷிதா.!

By Rajkumar · 17/6/2019

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களும் பரிட்சயமானவர் நடிகை ரக்ஷிதா. சினிமாவில் தான் நான் முதல் பாகம் இரண்டாம் பாகம் என்று பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

https://twitter.com/ZeeTamil/status/1140224085311361029

இந்த தொடரில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை இவர் மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. மேலும், திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஷிதா.

இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடித்து ரஷிதா, தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ படத்திலும் நடித்துள்ளார். எத்தனை சரவணன் மீனாட்சி வந்தாலும் நான் தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று விருது மேடையில் கொஞ்சம் திமிராகவே பேசி இருந்தார் ரஷிதா.

ஆனால், அதன் பின்னர் ஒரு தொடரில் கூட இவரை காண முடியவில்லை. இந்த நிலையில் தனது கணவர் தினேசுடம் ஜி தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள 'நாச்சியார்புரம் ' என்ற புதிய தொடரில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த தொடரின் ப்ரோமோ ஒன்றை ஜி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full