தயாரிப்பாளர்ன்னா என்னவெனா பன்னலாம்னு நினைக்காதீங்க - ரக்ஷிதா பரபரப்பு குற்றச்சாட்டு

By Ajju · 13/7/2024

பாலாஜி முருகதாசுக்கு ஆதரவாக நடிகை ரக்ஷிதா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 4’ சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதனால் இவர் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் பாலாஜி டைட்டில் வின்னரும் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் ‘ஃபயர்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் ‘ஃபயர்’. இதில் ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், மகாலட்சுமி, ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.

ஃபயர் படம்:

மேலும், ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, டி.கே இசையமைத்துள்ளார். சதீஷ். ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இத்திரைப்படம் நான்கு பெண்களைப் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தை தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, இதை ஒரு விழிப்புணர்வு படமாக எடுத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர் ஜே.சதீஷ்குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இப்படத்தின் கிளிப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், அப்படத்தில் பாலாஜி முருகதாஸ் செமையாக நடித்திருந்தார்.

பாலாஜி முருகதாஸ் பதிவு:

படிப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் ரிலீஸுக்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் பாலாஜி முருகதாஸ், ஃபயர் படத்தில் நடித்ததற்காக இதுவரை ஒரு சிங்கிள் பேமெண்ட் கூட தரவில்லை. இதனால் நான் சினிமாவை விட்டு விலகுகிறேன் என பதிவிட்டு இருந்தார். இவரின் பதிவு சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி பதில் கொடுத்து பதிவு போட்டு இருக்கிறார்.

ரக்ஷிதா பதிவு:

அதில் அவர், நீங்கள் பதிவு போட்ட சமயத்தில் நான் வெளியில் இருந்தேன். நீங்க இப்பதான் உணர்ந்தீர்கள். நான் ஏற்கனவே அவர்களைப் பற்றி அறிந்து வெளியே வந்துவிட்டேன். உங்களுக்கு நான் சப்போர்ட்டாக இருப்பேன் என்று கூறி இருந்தார். அதற்கு பின் ரக்ஷிதா, இயக்குனருக்கு பதிவு போட்டிருக்கிறார். அதில், நீங்கள் ஒரு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருக்கலாம். அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்காதீர்கள். தன்வினை தன்னைச் சுடும். நீங்கள் ஒரு தயாரிப்பாளர் என்று சொல்வதற்கே தகுதி அற்றவர் என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் பதிலடி:

இதை அடுத்து இயக்குனர் சதீஷ், வணக்கம் தக்ஷிதா, நீங்க நடித்ததை தான் உங்கள் பர்த்டேக்கு கிளிம்சா போட்டு இருக்கிறேன். நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடவில்லை. இன்னும் படம் வெளியில் வரும்போது நீங்கள் நடித்த காட்சிகள் எல்லாமே வெளியில் வரும். நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நடித்திருக்கிறீர்கள். இலவசமாக நடித்து கொடுக்கவில்லை. அதற்கான அக்ரிமெண்ட் என் கையில் இருக்கிறது. நீங்கள் பணம் வாங்கினதுக்கு ஆதாரமும் என் கையில் இருக்கிறது. அதனால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம். தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் சோசியல் மீடியாவில் போடற மாதிரி ஆயிடும். மதுரை வினையும், பிக் பாஸ் வினையும் தன்னைச் சுடும், குருவே சரணம். ஃபயர் திரைப்படத்தில் தாங்கள் நடித்ததை மறந்து விட்டீர்கள். அதே படத்தை shit என்று விமர்சனம் செய்துள்ளீர்கள். அந்த shitல் தான் நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full