சின்மயி பாட நான் தடை போட்டேனா? அந்த விஷயமே வேறு - உண்மையை உடைத்த நடிகர் ராதா ரவி
சின்மயி ban செய்தது தொடர்பாக நடிகர் ராதாரவி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் விவகாரம் தான் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து வெளியாகி இருக்கும் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டது.
இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது. இந்த படத்தில் முத்த மழை என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை பாடகி தீ தான் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி தான் முத்த மழை பாடலை பாடி இருந்தார்.
தக் லைப் படம்:
இந்த பாடலை கேட்டு எல்லோரும், தீ பாடியது விட சின்மயி பாடிய வெர்சன் தான் அழகாய் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது என்று இருவரையும் ஒப்பிட்டு கமெண்ட்ஸ்களை போட்டு இருந்தார்கள். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சின்மயி, என்னையும் தீயையும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் பாடிய பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய வேலையை தான் நான் செய்தேன். பாடகி தீக்கு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முக பாவனை யாராலும் கொடுக்க முடியாது.
சின்மயிக்கு ஆதரவு:
எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது அவசியம் அற்றது என நினைக்கிறேன் என்று கூறி இருந்தார். இருந்தாலும் சின்மயின் குரலைக் கேட்டு பலருமே பாராட்டி இருக்கிறார்கள். இந்தக் குரலையாட இத்தனை வருடமாக பேன் செய்து வைத்திருந்தீர்கள்? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள். இதை அடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சின்மயி, நான் சந்தா கட்டவில்லை என்று டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக சொன்னார்கள். ஆனால், உண்மை காரணம் நான் மீடு பற்றி பேசியிருந்தது தான். எனக்கு தடை விதிக்கப்பட்டது என்ற தகவலை கடிதம் வாயிலாக தான் வந்தது. திரும்ப சேர வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்கணும் என்று சொன்னார்கள்.
தமிழ் சினிமாவில் ban:
அவருடைய காலில் விழ வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் நான் முடியாது என்று சொன்னேன். ஒரு வாரம் முன்பு கூட மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏன் கேட்கணும்? அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று கூறி இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் சின்மயி பேன் செய்தது குறித்து ரசிகர்கள் அதிகமாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள். அதோடு இதற்கு எல்லாம் காரணம் ரராதா ரவி என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ராதாரவி, சின்மயி பாட்டு பாட நான் தான் தடை போட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை கிடையாது.
https://www.youtube.com/watch?v=zcdkgYboBuY
ராதா ரவி பேட்டி:
நான் டப்பிங் யூனியனுக்கு தான் தலைவராக இருந்தேன். ஆனால், அவர் பாடுவதற்கு தடை விதித்தது மியூசிக் யூனியனில் தான். மியூசிக் யூனியனுக்கும் டப்பிங் யூனியனுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. 200 யூனியன் இருக்கும் இடத்தில் டப்பிங் யூனியன் வேறு, மியூசிக் யூனியன் வேறு. இது தெரியாதவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் என்ன சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார்.