தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ராதாரவி. இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை பழம் பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனாவார். அதே போல இவரின் சகோதரிதான் ராதிகா. இவரும் சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் இவர் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் ராதாரவி தலைமையில் சென்னை சாலிகிராமத்தில் சின்னத்திரை, மற்றும் வெள்ளித்திரை டப்பிங் கலைஞர்களுக்கு என்று தனியாக ஒரு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக்தின் சீரமைப்பு பணிகளை உறுப்பினர்களின் பணத்தை கொண்டு சரி செய்த ராதாரவி அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்றும், விதிகளை மீறி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் சிலர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Advertisement

கட்டிடத்திற்கு சீல் :

இந்நிலையில் இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையினர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் ஆய்வு செய்து அந்த டப்பிங் கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக ராதாரவிக்கு நோட்டீஸ் விட்ட நிலையில் இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் தான் இந்த விஷயம் குறித்து “ஈரமான ரோஜா” சீரியலில் நடித்து வந்தவரும், இந்த பிரச்னை குறித்து அதிகம் விமர்சித்தவரும் ஆகிய தாசரதி பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

தாசரதி பேட்டி :

அவர் அந்த பேட்டியில் பேசுகையில் “உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் சம்பளத்தில் வந்ததுதான் அந்த கட்டிடம். ஆனால் இதனை நிர்வகிக்கும் நிர்வாகிகள் சிலருடைய அலட்சியத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது இருக்கும் இநத கட்டிடம் விலைக்கு வாங்கப்பட்டது ஆனால் அதன் கணக்கு சரியாக காண்பிக்க படவில்லை. அதற்கு மாறாக இடத்தை தனியாக வாங்கி கட்டிடம் எழுப்பியதாக நிதி மோசடி நடந்திருக்கிறது.

Advertisement

சொந்த வீடுனா இப்படி பண்ணுவாரா? :

அதே போல கட்டிடமாக வாங்கிவிட்டு 3 மாடிகள் காட்டும் போது சரியான அனுமதி வாங்கவில்லை, இதனை உறுப்பினர்கள் யாரவது கேட்டால் அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கி விடுகின்றனர். எங்களுடைய கேள்வி என்னவென்றால் உறுப்பினர்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் உருவான இந்த கட்டிடம் யாரோ ஒருவரின் சுய லாபத்திற்காக பலியாக வேண்டுமா? ராதா ரவி சொந்தமாக ஒரு கட்டிடத்தை கட்டினால் இப்படித்தான் அனுமதி வாங்கலாம் காட்டுவாரா? என்று சரமாரியாக பேசினார்.

Advertisement

கதிர் கூறியது :

இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து யூனியனில் செயலாளராக இருக்கும் கதிர் பேசுகையில் “கட்டிடத்தின் முதல் மாடிக்கு அனுமதி வங்காதது உண்மைதான். ஆனால் அந்த விஷியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இது போன்ற விஷியங்களை மாநகராட்சி தீவிரகமாக எடுத்தது என்றாலே சென்னையில் பால் வீடுகளை இடிக்க வேண்டியதுதான் என்று கூறினார். மேலும் இது சம்மந்தமாக வழக்கறினார்கள் மூலம் முறையாக கையாண்டு கட்டிடத்தை மீட்போம் என்று உறுதி கூறியுள்ளார்.

Advertisement