அவன அப்படி பாக்க முடியல, அரசியல்ல இப்படி இருக்க கூடாது, இதுக்கு உதாரணம் அவன் தான் - கேப்டன் குறித்து கண்ணீர் வடித்த ராதாரவி.

By Rajkumar · 16/12/2023

விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து மனம் நொந்து நடிகர் ராதாரவி பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

https://twitter.com/kollycorner/status/1735241907712958826

90 காலகட்டம் தொடங்கி 2k வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் விஜயகாந்த். பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேமுதிக கட்சியை அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்.

விஜயகாந்த் உடல்நிலை:

இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=6oXMAZe4jXQ&t=80s

தேமுதிக பொதுக்கூட்டம் :

அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில்கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

ராதாரவி பேட்டி :

இந்த கூட்டத்தின் போது நாற்கலையில் அழைத்து வரப்பட்ட கேப்டனை பார்த்து தொண்டர்கள் கதறி அழுதனர். அதிலும் ஒரு கட்டத்தில் நாற்காலியில் இருந்து அப்படியே சரிந்து விழபார்த்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இந்த வீடியோவை கண்ட பலரும் கேப்டனின் நிலையை கண்டு கலங்கினர். இப்படி ஒரு நிலையில் கேப்டன் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் கேப்டனின் நெருங்கிய நண்பர் ராதாரவி

https://twitter.com/SSMusicTweet/status/1735679051749318909

அவன பாக்க விட மாற்றங்க :

அதில் பேசிய அவர் ' அவனை ஏன் அவ்ளோ துன்புறுத்தனுமான்னு இருக்கு, சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் அவன். அவனை இப்படி பார்க்க முடியல, இந்த நேரத்துல அவன தொந்தரவு பண்ண கூடாது. பாத்தா ரொம்ப கஷ்டம் ஆகிடும். அரசியலுக்கு நேர்மை உகந்த விஷயம் அல்ல, அதுக்கு உதாரணம் விஜயகாந்த் தான். அவன் அரசியலுக்கு வந்தே இருக்க கூடாது' என்று உருக்கமுடன் பேசி உள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full