தன்னுடைய மார்பகங்கள் பெரிதாக இல்லை என்று பலரும் விமர்சித்ததை குறித்து நடிகை ராதிகா ஆப்தே அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். Vaah! Life Ho Toh Aisi! என்ற இந்தி படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார் ராதிகா ஆப்தே.

அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் 2013 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து வெற்றிச் செல்வன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த கபாலி படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

ராதிகா ஆப்தே திரைப்பயணம்:

இந்த படத்தில் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சித்திரம் பேசுதடி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் தமிழில் வெளியாகவில்லை. ஆனாலும், தற்போது இவர் பாலிவுட், ஹாலிவுட் போன்ற பிறமொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ராதிகா ஆப்தே:

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் துணிந்து நடித்து வருகிறார். இதனால் இவர் ஒரு சில படங்களில் நிர்வாணமாகக் கூட இவர் நடித்திருந்தார். அதே போல் இவரின் அந்தரங்க புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதோடு இவர் அடிக்கடி எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Advertisement

ராதிகா ஆப்தே அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் ராதிகா ஆப்தே பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்படம் தொடங்கிய போது எதிர்கொண்ட விமர்சனங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதாவது, பாலிவுட் தான் ராதிகா ஆப்தே தன்னுடைய திரைப்படத்தை தொடங்கினார். அப்போது மூக்கின் அமைப்பு சரியாக இல்லை, மார்பகங்கள் பெரிதாக இல்லை என்று பலரும் விமர்சித்து இருந்தார்கள். அதோடு மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டு நடிக்க வாருங்கள் என்றும் ராதிகா ஆப்தேவுக்கு பலரும் அறிவுரை கூறியிருந்தார்கள்.

Advertisement

உடல் அமைப்பு குறித்த விமர்சனம்:

இதனால் ராதிகாவின் உடைய உடல் எடை 3 முதல் 4 கிலோ வரை அதிகரித்தது. உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறார் ராதிகா ஆப்தே. மேலும், ஆத்திரம் அடைந்த ராதிகா, பெண்களின் உடலை பற்றி விமர்சிப்பது தங்களின் உரிமையாகவே கருதுகிறார்கள். இப்போது யாராவது அப்படி பேசினால் அவர்களை சுட்டு விடுவேன் என்று கூறியிருக்கிறார். தற்போது ராதிகா ஆப்தேவின் வீடியோ சோசியல் மீடியாவில் படுவைரல் ஆகி வருகிறது

Advertisement