தெலுங்கு சினிமா குறித்து படு மோசமான விமர்சனம், பழைய பேட்டியால் பஞ்சாயத்தில் சிக்கிய காலா பட நடிகை.

By Manikandan · 19/2/2024

தெலுங்கு சினிமா குறித்து ராதிகா ஆப்தே பேசி இருக்கும் பழைய பேட்டி வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் Vaah! Life Ho Toh Aisi! என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் ஆல் இன் ஆல் அழகு ராஜா, பா. ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த கபாலி போன்ற படத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் தமிழில் சித்திரம் பேசுதடி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் தமிழில் வெளியாகவில்லை. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தே திரைப்பயணம்:

அதிலும் இவன் நடிப்பில் வெளிவந்த அந்தாதுன், லஸ்ட் ஸ்டோரீஸ், பார்ச்சுடு போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் இவருக்கென்று ஒரு தனி இடத்தையும் பிடித்து தந்திருக்கிறது. இன்னொரு பக்கம் இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் இவர் அடிக்கடி பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பழைய பேட்டி வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

View this post on Instagram

A post shared by bolly hours (@bollyhour)

ராதிகா ஆப்தே பேட்டி :

அதில் அவர், தெலுங்கு சினிமாவில் ஆண் ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது. அங்கு இருக்கும் ஹீரோக்களை நாம் கடவுளாய் வழிபட வேண்டும். கதாநாயகியாக இருந்தாலும் அதே நிலைமைதான். நடிகர்கள், இயக்குனர்கள் என பலருமே பெண்களை மதிப்பது கிடையாது. அங்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இதனால் தான் தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் பழைய பேட்டி வீடியோ தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது,.

நெட்டிசன் பதிவு:

இதை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் பலருமே ராதிகா ஆப்தேவிற்கு எதிராக கமெண்ட்களை பதிவிட்டும் விமர்சித்தும் வருகிறார்கள். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், நீங்கள் எத்தனை தெலுங்கு படத்தில் நடித்துள்ளீர்கள்? பாலகிருஷ்ணா அப்படி என்றால் மற்ற எல்லா ஹீரோக்களும் அப்படித்தான் என்று அர்த்தம் கிடையாது. சிரஞ்சீவி, பிரபாஸ் ஆகியோர் உடன் இணைந்து பணியாற்றுங்கள். அவர்கள் நடிகைகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.

https://twitter.com/Nikhil195Nikhil/status/1758416443832738054

ராதிகா ஆப்தே குறித்த சர்ச்சை:

அதற்கு பிறகு தெலுங்கு சினிமா பற்றி விமர்சியுங்கள். அதுமட்டுமில்லாமல் ஆண் ஆதிக்கம் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள், இவர் தெலுங்கில் நடித்திருப்பது அவருடன் மட்டும்தான் என்பதால் அவரை எப்படி விமர்சிக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால், சிலர் ராதிகா ஆப்தேவிற்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான லெஜன்ட் மற்றும் லயன் போன்ற படங்களில் ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full