அந்த படத்துல நிர்வமானமா நடிசீங்களே, அதான் அப்படி கேட்டேன் - இயக்குனருக்கு காலா பட நடிகை கொடுத்த பதிலடி.

By subhashini · 22/11/2021

நிர்வாணமாக நடிப்பதற்கு நான் ஒன்னும் சினிமாவுக்கு வரவில்லை என்று பகிரங்கமாக பேட்டி அளித்த நடிகை ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தோனி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சித்திரம் பேசுதடி 2, வெற்றிசெல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் வெப்சீரிஸ்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனிடையே இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் துணிந்து நடிக்கக் கூடியவர். இதனால் இவர் ஒரு சில படங்களில் நிர்வாணமாகக் கூட நடித்திருந்தார். அதே போல் இவரின் அந்தரங்க புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இதையும் பாருங்க :'இது மனித உரிமை மீறல்' அரசின் அறிவிப்பால் மாநாடு படத்திற்கு வந்த சிக்கல். தயாரிப்பாளர் ஆதங்கம்.

இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சமீபத்தில் இயக்குனர் ஒருவர் என்னை சந்தித்து அவருடைய படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டிருந்தார். ஏன் இது போன்ற கதைகள் எல்லாம் என்னிடம் வந்து கேட்கிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் படுகவர்ச்சியாக நடித்து இருந்தீர்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஏற்க நிர்வாணமாக ஒரு சில படத்தில் கூட நடித்திருக்கிறீர்கள். அதனால் தான் உங்களிடம் கேட்டேன். என்னுடைய படத்தில் அதுபோன்ற கதாபாத்திரம் செய்விர்களா? அந்த எண்ணத்தில் தான் உங்களை நான் அணுகினேன் என்றும் கூறினார்.

எனக்கு இதைக் கேட்டு பயங்கர அதிர்ச்சியாகிவிட்டது. இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறில்லை. கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். மேலும், நிர்வாணமாக நடிக்க வைப்பது என்று கண்டபடி கதைகளைக் கொண்டு வந்தால் எப்படி நடிக்க முடியும். நிர்வாணமாக, கவர்ச்சியைக் காட்ட மட்டும் நான் சினிமாவுக்கு வரவில்லை. கதை பிடித்து இருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நான் கதைக்காக செல்வன். கதையே இல்லாமல் வெறும் உடம்பை மட்டும் காட்ட நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்றால் அவ்வளவு தான் என்று கொந்தளித்து பதிலளித்திருந்தார். நடிகை ராதிகாவின் இந்த பதில் சோசியல் மீடியாவில் வைரலாகியது. இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full