பெரிய ஹீரோ உண்மை முகம் அப்போது தான் தெரிந்தது, அவங்க பெயர்கள் - ஆதங்கத்தில் ராதிகா ஆப்தே சொன்ன விஷயம்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
இதை அடுத்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சித்திரம் பேசுதடி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின் இவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் தமிழில் வரவில்லை. ஆனாலும், தற்போது இவர் பாலிவுட், ஹாலிவுட் போன்ற பிறமொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தே திரைப்பயணம்:
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் துணிந்து நடித்து வருகிறார். தற்போது நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிருக்கும் படம் ராத் அகேலி ஹை: தி பன்சால் மர்டர்ஸ். இந்த படத்திற்காக நடிகை ராதிகா ஆப்தே பல பேட்டிகளில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் நடிகை ராதிகா ஆப்தே, சில பெரிய பிரபலங்களுடன் பணியாற்றும்போது அவர்களுடைய உண்மை முகத்தை பார்த்தேன்.
ராதிகா ஆப்தே பேட்டி:
அவர்கள் மோசமானவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அதிலிருந்து அவர்களுடன் இனி ஒருபோதும் பணியாற்றக் கூடாது என்று முடிவு செய்தேன். அவர்களின் பெயர்களை சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். மேலும், கடுமையான பணம் நெருக்கடியில் நான் இருந்தபோது தென்னிந்திய படங்களில் நடிக்கப் போனேன். அங்கும் மோசமான அனுபவங்களை எல்லாம் சந்தித்தேன். எனக்கு உண்மையிலேயே அப்போது பணம் தேவைப்பட்டது. தென்னிந்திய படத்திற்காக சென்றிருந்தபோது ஒரு முறை சின்ன ஊரில் படப்பிடிப்பு நடந்தது. அந்த செட்டில் நான் மட்டும்தான் பெண். அவர்கள் செய்ய சொன்ன விஷயங்கள் எனக்கு ரொம்பவே வருத்தத்தை கொடுத்தது.
https://www.youtube.com/watch?v=YXeZXoC8pd4
சினிமா அனுபவம்:
எனக்கு மேனேஜர் கூட கிடையாது. ஏஜென்ட் கிடையாது. என்னுடைய டீம் முழுவதுமே ஆண்கள் தான் இருந்தார்கள். பெண்கள் இல்லாத அந்த சூழலில் அவர்கள் என்னை அப்படி செய்ய சொன்னது உச்சகட்ட பாகுபாடு. நான் பொதுவாகவே தைரியமானவள். இருந்தாலும் அந்த நாட்களை நினைத்தால் எனக்கு இதயம் இன்னும் பயத்தில் இருக்கிறது. மீண்டும் அந்த சூழலில் இருந்தால் அழுது விடுவேன். எந்த பெண்ணுக்கும் அந்த நிலைமை வரக்கூடாது என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.