சின்னத்திரையில் இதுவரை எந்த ஒரு நடிகையும் செய்யாத சாதனையை செய்த ராதிகா.!

By Rajkumar · 10/3/2019

தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா. சினிமா பின்னணி கொண்ட பிரபலமாக இருந்தாலும் இவரது தனிப்பட்ட சிறப்பான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் ராதிகா.

https://twitter.com/realradikaa/status/1104329372910018560

ராதிகா திரையுலகுக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன.  வெற்றிகரமாக கிழக்கே போன ரயில், இந்த நாற்பதாண்டுகளில் அரசியல், சினிமா, சின்னத்திரை என்று சகல திசைகளிலும் பயணம் செய்து சாதித்திருக்கிறது. வாணி-ராணி தொடரில் இரட்டை வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த இந்த நடிகவேளின் வாரிசு, தற்போது `சந்திரகுமாரி’ சீரியலில் வரலாற்று நாயகியாகப் புது அவதாரம்எடுத்துள்ளார்.

தற்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் ராதிகா பல ஆண்டுகளாக ராடன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல சீரியல்களை தயாரித்து வருகிறார். இதுவரை சித்தி, அண்ணாமலை, செல்லமே செல்வி, வாணி ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சிவமயம், ருத்ரவீணை போன்ற பல சீரியல்களை தயாரித்துள்ளார்.

https://twitter.com/realradikaa/status/1104329723826454528

இந்நதிநிலையில் நடிகை ராதிகா இதுவரை 6850 எபிசோட்களிலும், 3430 மணி நேரம் நடித்துள்ளாராம். இடையில் இதுவரை 2 மாதம் மட்டுமே பிரேக் எடுத்துள்ளாராம் ராதிகா. இதுவரை வேறு எந்த ஒரு நடிகையும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை என்பதால் ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full