'அட்லீயே பரவாயில்ல' - ஹாலிவுட் பட வசனத்தை அப்படியே சுட்டு திருமண மேடையில் பேசியுள்ள அம்பானியின் மருமகள்.

By subhashini · 8/3/2024

திருமண விழாவில் முகேஷ் அம்பானியின் மருமகள் ராதிகா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் முகேஷ் அம்பானி மகன் திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலகளவில் மிகப் பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர் ஆவார். இவர் நீடா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் ஆகாஷ், நிஷா ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சாண்ட் என்பவரை தான் ஆனந்த் திருமணம் செய்ய இருக்கிறார். வீரேன் மெர்சென்ட் அவர்கள் இந்திய மருந்தக நிறுவனமான என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

ராதிகா குறித்த தகவல்:

இவரின் மகள் ராதிகா மும்பையில் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்தவுடன் நியூயார்க்கில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். பின் இவர் இஸ்ப்ரவா நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து இருந்தார். தற்போது இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பணியாற்றி வருகிறார். இது மட்டும் இல்லாமல் இவர் பல ஆண்டு காலமாக பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Babban (@babbanpoorajhalla)

ஆனந்த்- ராதிகா திருமணம்:

மேலும், ஆனந்த்- ராதிகா இருவருமே கல்லூரியின் போது சந்தித்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகளாக இவர்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. அதற்கு பின் இவர்கள் அவருடைய நட்பு காதலாக மாறியது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆனந்த் மற்றும் ராதிகா இருவருக்கும் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ நாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. இவர்களுடைய திருமணம் ஜூலை மாதம் 12ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள். தற்போது திருமணத்திற்கு முந்தையதாக நடைபெற இருக்கும் விழாக்கள் தொடங்கி இருக்கிறது.

முகேஷ் அம்பானி மகன் திருமணம்:

அந்த வகையில் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்று இருந்தது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு என்று பலர் வந்து இருக்கிறார்கள்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதேபோல் இந்தியாவில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலுள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், ராம்சரண், ரஜினிகாந்த், இயக்குனர் அட்லீ என பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இதை அடுத்து விழாவில் ஆனந்த அவர்கள் ராதிகாவை புகழ்ந்து பேசி இருந்தார். அதேபோல் ராதிகாவும் தன்னுடைய வருங்கால கணவர் ஆனந்த் குறித்து பயங்கரமாக பேசி இருந்தார். இந்த நிலையில் ராதிகா பேசிய விஷயம் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, ராதிகா பேசினது முழுக்க முழுக்க பிரபல பாலிவுட்டில் வெளியான 'ஷால் வி டான்ஸ்' படத்தில் வரும் சூசன் சரண்டனின் கதாபாத்திரத்தில் பேசப்பட்டது. அச்சு மாறாமல் அப்படியே ராதிகா பேசி இருக்கிறார். இதை தான் நெட்டிசன்கள் விமர்சித்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full